பெங்களூரு: இந்தியர்கள் திருவிழாவாக கொண்டாட கூடிய ஒரு கிரிக்கெட் லீக் தான் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். 20 ஓவர்களில் விளையாடக்கூடிய இந்த ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது.
10 அணிகள் சேர்ந்து விளையாடக்கூடிய இந்த விளையாட்டு கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு அணியையும் குறிப்பிட்ட நபர்கள் தங்களுக்கு சொந்தமாக வாங்குகின்றனர். தங்கள் அணிகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வீரர்களை ஏலம் எடுக்கின்றனர். அப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் உண்மையில் ஒரு சரக்கு நிறுவனம் ஆகும்.

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரைக்கும் அதில் விளையாடும் வீரர்கள் மட்டுமல்ல அந்த அணிகளின் உரிமையாளர்களும் வீரர்களுக்கு நிகராக புகழ்பெறுகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற மதுபான நிறுவனம் தான் இதன் உரிமையாளர். இந்நிறுவனத்தின் சார்பாக பிரதேஷ் மிஸ்ரா அணியின் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
டியாஜியோ குழுமத்துக்கு உட்பட்ட யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விளம்பர அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் பிரதேஷ் மிஸ்ரா. இவர் இதற்கு முன்பு பெர்னார்டு ரிச்சர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர். 2014 ஆம் ஆண்டு டியாஜியோ நிறுவனத்தில் இணைந்தார்.
இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு அவர் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பதவி உயர்வு பெற்றார். இந்த துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த நபராக காணப்படும் பிரதேஷ் மிஸ்ரா, இந்தியாவிக் ஐஎம்எஃப்எல் & ஸ்காட்ச் விஸ்கியை விளம்பரப்படுத்தியதில் முக்கியமான நபராக இருக்கிறார்.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்சிபி அணியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு சேல்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் பிரிவு என பல்வேறு நிறுவனங்களில் இவர் பணிபுரிந்திருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டப்படிப்பு முடித்த இவர் காஸியாபாத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் பிஜி டிப்ளமோ படித்து முடித்தவர்.
உலக அளவில் ஆல்கஹால் விற்பனையில் முக்கியமான நிறுவனமாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா ஆகிய மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது, 18 பிராண்டுகளின் கீழ் உலகம் முழுவதும் இந்த நிறுவனம் கல்லா கட்டி வருகிறது.
யுனைடெட் ஸ்பிரெட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக மகேந்திர குமார் ஷர்மா செயல்பட்டு வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளராக யுனைடெட் ஸ்பிரெட்ஸ் நிறுவனமே இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் என்பது 27,577.50 கோடி ரூபாய் என மணி கண்ட்ரோல் இணையதளம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் 1826 ஆம் ஆண்டு மெக்டோவல் அண்ட் கம்பெனி என்ற பெயரில் தொடங்கப்பட்டது தான் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம். இது 1898 ஆம் ஆண்டு முறைப்படி ஒரு நிறுவனமாக பதிவு செய்து கொண்டது. 2013 ஆம் ஆண்டு டியாஜியோ நிறுவனம் யுனைடெட் ஸ்பிரிட்டில் குறிப்பிட்ட பங்குகளை வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது.
story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications