பணத்தை சேமித்து வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது என நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் இதைவிட பெரிய நிதியியல் தவறை நீங்கள் செய்துவிட முடியாது என்பாது தான் உண்மை. நீங்கள் பணத்தை பணமாக சேமித்து வைத்திருப்பது மூலம் இழப்பை சந்திக்கிறீர்கள் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.
பணவீக்கம் என்பது மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் ஒரு திருட்டு வைரஸாகும். இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இது ரூபாய் மதிப்பு குறையும் போது, டாலர் மதிப்பு அதிகரிக்கும் போது இன்னமும் வேகமாக குறைகிறது.

பணவீக்கம் நம்முடைய சேமிப்பு மற்றும் முதலீடுகள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள, 1 கோடி ரூபாய் தொகையை அடிப்படையாக வைத்து பார்ப்போம். பணவீக்கத்தின் மூலம் பணத்தின் மதிப்பில் ஏற்படும் பாதிப்பை கணக்கிட ஒரு ஃபார்முலா உள்ளது.
பணவீக்கத்திற்குப் பிறகு பணத்தின் மதிப்பு = தற்போதைய தொகை × (1 - பணவீக்க விகிதம்) தற்போது நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த மாதத்தை காட்டிலும் அதிகமாக 6% ஆக இருக்கும் வேளையில் இதை ரூ.1 கோடி தொகையை வைத்து கணக்கிடலாம்.
கணக்கீடு: 10,000,000 × (1 - 0.06) = 9,400,000
முடிவு: ஒரு வருடத்திற்குப் பிறகு, ரூ. 1 கோடி சுமார் ரூ. 94 லட்சமாக இருக்கும்.
அதாவது நாட்டின் பணவீக்க நிலைமை அடுத்த ஆண்டும் 6 சதவீதமாக இருந்தால் உங்கள் கையில் இருக்கும் 1 கோடி ரூபாய் பணத்தை வைத்து 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மட்டுமே வாங்க முடியும். இதுதான் பணவீக்கத்தின் மோசமான முகம்.
இதே 1 கோடி ரூபாய் தொகை 3 வருடத்திற்கு பின்பு எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடலாம்:
பணவீக்கத்திற்குப் பிறகு மதிப்பு = தற்போதைய தொகை × (1 - பணவீக்க விகிதம்)^3
கணக்கீடு: 10,000,000 × (1 - 0.06)^3 = 8,352,160
முடிவு: மூன்று வருடங்களுக்குப் பிறகு, ரூ. 1 கோடி சுமார் ரூ. 83.52 லட்சமாக இருக்கும்.
பணவீக்கத்தின் உண்மையான தாக்கம் இப்போது புரிந்துருக்கும். இதனால் பணத்தை கையில் வைத்திருப்பதை விட வங்கியில் பணவீக்க பாதிப்பை சரி செய்யும் அளவிலான வட்டியிலாவது முதலீடு செய்வது சிறந்தது. இதன் மூலம் பணத்தை நீண்ட காலமும், அதிக தொகையும் கையில் வைத்திருக்க கூடாது என்பது இதிலிருந்து புரிந்திருக்கும்.
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடவும் மக்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்தை பங்குகள், நிலையான சொத்துக்கள் அல்லது தங்கம், வைப்பு நிதி போன்ற பணவீக்க விகிதத்தை விட வேகமாக உயரும் சொத்துக்களில் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications