இந்திய வர்த்தக மற்றும் முதலீட்டுச் சந்தை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைய முதலும் முக்கியக் காரணமாக இருந்தது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் உருவாகவில்லை என்றால் கட்டாயம் இத்தனை டிஜிட்டல் சேவைகள் வந்திருக்காது.
ஹோம் லோனில் துவங்கி காய்கறி வாங்குவது வரை, மருத்துவமனையில் மருத்துவரைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் புக்கிங் முதல் ஆன்லைன் கல்வி வரையில் அனைத்தும் தற்போது உட்கார்ந்த இடத்திலேயே செய்யும் அளவிற்கு டிஜிட்டல் சேவை வளர்ந்துள்ளது.
பெட்டர் ஹோம் ஆப்
இந்நிலையில் ஸ்டார்ட்அப் என்னும் சொல்லுக்குத் தமிழ் சொல்-ஐ சென்னை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெட்டர் ஹோம் ஆப் என்னும் ஹோம் இம்ப்ரூவ்மென்ட் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனம் தனது லின்கிடுஇன் கணக்கில் பதிவிட்டு உள்ளது.
புத்தொழில் - Startup
ஒரு சொல் ஒரு பண்பை விதைக்கும். ஒரு இயக்கத்தைக் கூட உருவாக்கும். "புத்தொழில்": Startup சொல்லின் தமிழ் சொல்லுக்கு விளக்கம் தேவை இல்லை. இது உறுதியாகப் பண்பை விதைத்து இயக்கமாக மாற்றக்கூடும்.
Startup TN அமைப்பு
Eric Ries "The Lean Startup" என்ற நூல் மூலம் Startup சொல்லை பிரபலமாக்கி பலரை தொழில் தொடங்க வைத்தார். தமிழக அரசு புதிய தொழில் தொடங்கும் பண்பை Startup TN என்ற நிறுவனத்தின் மூலம் சிவராஜா ராமநாதன் அவர்களின் தலைமையில் வளர்த்து வருகிறார்கள்.
10,000 புத்தொழில் நிறுவனங்கள்
2026 ஆம் ஆண்டுக்குள் 10,000 புத்தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு மட்டுமில்லாமல் அது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்
வளர்க புத்தொழில் இயக்கம்!
புத்தொழில் என்ற சொல் இந்தப் பண்பையும் இலக்கையும் தமிழகத்தின் எல்லா முடுக்குகளுக்கும் எடுத்துச்செல்லும் என்பது உறுதி. இதைப் போல் உலகில் உள்ள மற்ற மொழிகளிலும் "startup" சொல்லை அழகாக மொழி பெயர்த்துத் தொழில் தொடங்கும் பண்பை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். வளர்க புத்தொழில் இயக்கம்!
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு மாநிலத்தில் ஸ்டார்ட்அப் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய நிறுவனங்களையும், முதலீடுகளை ஈர்க்க பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதேவேளையில் தமிழ்நாட்டில் பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications