வந்தே பாரத் புல்லட் ரயிலை தயாரிக்க என்ன செலவாகும் தெரியுமா?

இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. 82 தடங்களுக்கு மேலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த ரயில்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வந்தே பாரத் ஸ்லீப்பர் எகஸ்பிரஸ் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

இதனிடையே மும்பையில் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களும் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகல்நேர ரயில்களாகும். வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் 200 கி.மீ. தொலைவுக்குள் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கின்றன. இந்த மெட்ரோ ரயில்கள் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும்.

வந்தே பாரத் புல்லட் ரயிலை தயாரிக்க என்ன செலவாகும் தெரியுமா?


இந்த நிலையில் புல்லட் ரயில்கள் பற்றிய சிந்தனை இந்திய ரயில்வேக்கு வந்துவிட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கனவு வெற்றிகரமாக நிறைவேறிவிட்ட நிலையில் இப்போது புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

முதல் புல்லட் ரயில் அகமதாபாத்- மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. புல்லட் ரயிலுக்கான இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புல்லட் ரயில்கள் அதற்காக அமைக்கப்படுகின்ற ஹைஸ்பீடு ரியல்வே காரிடரில் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிசைனிலேயே இந்த புல்லட் ரயில்களும் தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. புல்லட் ரயில்களைத் தயாரிப்பது குறித்து 2018 ஆம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது. அப்போது 10 பெட்டிகள் கொண்ட புல்லட் ரயிலைத் தயாரிப்பதற்கு ரூ.389 கோடி
செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இப்போது அதன் செலவு ரூ.480 கோடிகள் ஆகும் எனத் தெரிகிறது.

புல்லட் ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் பயணிகள் வெகு விரைவாக நகரங்கள் இடையே பயணிக்கும் வசதி உண்டாகும்.
இருந்தாலும் புல்லட் ரயில்கள் செல்வதற்கு ஹைஸ்பீடு ஸ்பெஷல் ரயில் கார்டர்களை அமைக்க வேண்டும் என்பதால் இந்தத் திட்டத்துக்கான செலவு மிக அதிகமாக இருக்கும என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தாலும் புல்லட் ரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்தி மோடியின் அரசு முனைப்பாக உள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெருமளவு வெற்றி பெற்றதற்குக் காரணம் அதன் வேகம். எனவே அதிக வேகத்தில் ரயில்களை இயக்கினால் மக்கள் அதிகளவில் பயன்படுத்துவார்கள். ரயில்வேக்கும் அதிக லாபம் கிடைக்கும் என்று இந்திய ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.


Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+