இந்தியாவில் முடியரசு முறை 1971 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும், சில அரச குடும்பங்கள் இன்று அரசு பாரம்பரியம் மற்றும் ஆடம்பர வசதியுடன் வாழ்ந்து வருகின்றன.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கிள் வாழ்க்கை பற்றி பலரும் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்திய ராஜ வம்சங்கள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில ராஜ குடும்பங்கள் இன்றும் பழைய பாரம்பரிய வழக்கப்படியே ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த பணக்கார ஏழு ராஜ குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆடம்பர வாழ்க்கை, வருமானம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
வாடியர் பரம்பரை:
கடவுள் கிருஷ்ணரை வழிபடும் யதுவான்ஷி பரம்பரையை சேர்ந்தது தான் வாடியர் பரம்பரை. இந்த பரம்பரையின் தற்போதைய தலைவர் 27 வயதான யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ் வாடியர் தலைவராக இருக்கிறார். எனினும், இவர் தலைவர் பதவியை ஏற்கும் சட்டப்பூர்வ வம்சாவெளி இல்லை. ராஜமாதா இவரை தனது மகனாக தத்து எடுத்துக் கொண்டதால், இவர் ராஜாவாக முடிசூட்டப்பட்டார்.
மைசூரில் பட்டு மற்றும் வாடியர் பாரம்பரியம் மிகவும் பிரபலம். இந்த குடும்பத்தை ஸ்ரீகாந்ததத்தா துவங்கிய சேர்ந்த ராயல் சில்க் ஆஃப் மைசூரு தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வந்தது. 2016 ஆம் ஆண்டு ராஜா துங்கர்பூர் ராணி த்ரிஷிகா குமாரி சிங்-ஐ திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று வயது மகன் உள்ளார்.
ஜோத்பூர் ரத்தோர்
ஜோத்பூரை ஆட்சி செய்தது ரத்தோர் குடும்பத்தார் என அனைவரும் அறிவர். மேலும் இவர்களின் வம்சாவெளியினர் இன்றும் இங்கு வசித்து வருகின்றனர். இங்குள்ள மெஹ்ராங்கர் கோட்டை மற்றும் உமைத் பவன் அரண்மனைகள் உலகின் மிகப்பெரும் கோட்டை மற்றும் பெரிய தனியார் குடியிருப்புகள் ஆகும். தற்போது மகாராஜா கஜ் சிங் உமைத் பவன் அரண்மனையில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையை சுற்றி பார்க்கலாம். இவற்றை தாஜ் குழும ஓட்டல்கள் நிர்வகித்து வருகின்றன. பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸை இந்த அரண்மனையில் வைத்தே திருமணம் செய்து கொண்டார். மகாராஜா கஜ் சிங் மாநிலங்களவை உறுப்பினராகவும், திரிணிதாத் மற்றும் தொபாகோ உயர் ஆணையராக பதவி வகித்துள்ளார்.
ஜெய்பூரின் ராஜ குடும்பம்:
ஜெய்பூரின் கடைசி தலைவர் பவானி சிங் தனது மகள் தியா குமாரியின் மகன் பத்மநாப சிங்-ஐ தத்தெடுக்கப்பட்டு முடிசூட்டப்பட்டார். பத்மநாப சிங் 2016 ஆம் ஆண்டு ஜெய்பூரின் மகாராஜாவாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தேசிய அளவிலான போலோ வீரர் ஆவார். தற்போது ராம்பக் அரண்மனையை தாஜ் ஓட்டல்கள் குழுமம் நிர்வகித்து வருகிறது.
இதுதவிர பத்மநாப் ஏர்பிஎன்பி உடன் கூட்டணி அமைத்து ஜெய்பூர் அரண்மனையின் சூட் ஒன்றை வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இங்கு வரும் சுற்றுலாவாசிகள் அரண்மனையில் தங்கி, ராஜ வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் ராணி தியா குமாரி பவுன்டேஷனுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த குடும்பத்தின் மதிப்பு 2.8 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது.
ஜோத்பூர் ரத்தோர்
ஜோத்பூரை ஆட்சி செய்தது ரத்தோர் குடும்பத்தார் என அனைவரும் அறிவர். மேலும் இவர்களின் வம்சாவெளியினர் இன்றும் இங்கு வசித்து வருகின்றனர். இங்குள்ள மெஹ்ராங்கர் கோட்டை மற்றும் உமைத் பவன் அரண்மனைகள் உலகின் மிகப்பெரும் கோட்டை மற்றும் பெரிய தனியார் குடியிருப்புகள் ஆகும். தற்போது மகாராஜா கஜ் சிங் உமைத் பவன் அரண்மனையில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையை சுற்றி பார்க்கலாம். இவற்றை தாஜ் குழும ஓட்டல்கள் நிர்வகித்து வருகின்றன. பிரபல நடிகை பிரியண்கா சோப்ரா நிக் ஜோனஸை இந்த அரண்மனையில் வைத்தே திருமணம் செய்து கொண்டார். மகாராஜா கஜ் சிங் மாநிலங்களவை உறுப்பினராகவும், திரிணிதாத் மற்றும் தொபாகோ உயர் ஆணையராக பதவி வகித்துள்ளார்.
பரோடாவின் கேக்வாட்-கள்
பூனேவை சேர்ந்த கேக்வாடி-கள் 18 ஆம் நூற்றாண்டில் பரோடா (தற்போது வதோதரா) ஆட்சி செய்தனர். சமர்ஜித்சிங் கேக்வாத் பரோடாவின் ராஜ குடும்பத்தின் தலைவர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி ஆகும். இவர் லக்ஷமி விலாஸ் அரண்மனையை வைத்திருக்கிறார்.
இது உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்பு ஆகும். இதுதவிர ராஜா ரவி வர்மா கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் விலை மதிப்பற்ற தங்கம் மற்றும் சில்வர் நகைகளை வைத்திருக்கிறார். இதுதவிர பல்வேறு கோயில் டிரஸ்ட்கள் மற்றும் 17 கோயில்களை குஜராத் மற்றும் பனாரசில் நிர்வகித்து வருகிறார்.
பட்டோடி நவாப்கள்:
பட்டோடிகள் இன்றி இந்த பட்டியல் முழுமை பெறாது. நவாப்கள் பட்டோடி ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தனர். இந்த குடும்பத்தில் கடைசி ஆட்சியாளர் மன்சூர் அலி கான் பட்டோடி ஆவார். இவர் முன்னாள் இந்திய கிரிகெட் அணி கேப்டன் ஆவார். இவர் பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு சைஃப் அலி கான், சோஹா அலி கான் மற்றும் சபா அலி கான் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பட்டோடி அரண்மனை இப்ராகிம் கோத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை பத்து ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பட்டோடி ராஜ்ஜியத்தை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்த அரண்மனை பட்டோடி அரண்மனை ஓட்டல் ஆக மாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு மன்சூர் அலி மறைந்த பின், இந்த சொத்து பட்டோடி குடும்பத்திற்கு சொந்தமற்றதாக மாறியது. எனினும், 2014-இல் சைஃப் அலி கான் இந்த சொத்தை வாங்கிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை அவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications