வேன்கள், பிக்அப் டிரக்குகள், எஸ்யூவிகளை தயாரிக்கும் போர்ஸ் மோட்டார்ஸ் தலைவர் அபய் பிரோதியா இந்திய தொழில்துறையில் குறிப்பிடத்தக்கவர். 1958 ஆம் ஆண்டில் போர்ஸ் மோட்டார்ஸை அவரது மறைந்த தந்தை நவல்மால் பிரோதியா நிறுவினார்.
உலகளவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளான மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ்க் கார்களுக்கான இன்ஜின்களை போர்ஸ் மோட்டார்ஸ் தான் தயாரித்து வழங்குகிறது.

2023 டிசம்பர் 24 ஆம் தேதிப்படி அபய் பிரோதியாவின் நிகர சொத்து மதிப்பு 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும், இந்திய மதிப்பில் ரூ.29,800 கோடி.
உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் 817ஆவது இடத்தில் அபய் பிரோதியா உள்ளார். இந்திய அளவில் 67ஆவது இடத்தில் உள்ளார்.
அவரது வருமானத்தில் பெரும்பான்மையானது பஜாஜ் கம்பெனிகளின் பங்குகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ.
அபய் பிரோதியாவின் தலைமையின் கீழ் போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4760.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளது. தொடக்கத்தில் பஜாஜ் டெம்போ என அறியப்பட்டது. பஜாஜ் குழுமத்துடனான கூட்டணி ஒப்பந்தத்தில் இயங்கியதால் இந்த பெயர் பெற்றது.
ஜெயின் குடும்பத்தில் பிறந்த அபய் பிரோதியாவின் வயது தற்போது 78. 2009 ஆம் ஆண்டுவரை போர்ஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்தார். பின்னர் அதை தனது மகன் பிரசானுக்கு தந்து விட்டார்.
புனேயில் வசித்து வரும் அபய் பிரோதியா பெர்கூஸன் கல்லூரியில் படித்தவர். குவாலியரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பொருளாதாரத்தில் பிஇ (ஹானர்ஸ்) படித்துள்ளார். அவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.இந்திய ஆட்டோமொபைல் துறையில் போர்ஸ் மோட்டார்ஸுக்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications