பிரிட்டனின் அரசியலில் கடந்த சில மாதங்களாகவே அதிரடியான பல பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக போரீஸ் ஜான்சன் விலகல், லிஸ் ட்ரஸ் விலகல், ரிஷி சுனக் பிரதமர் என பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அவரின் பின்னணி குறித்து சமூக வலைதளங்களில் அலசி ஆராயத் தொடங்கியுள்ளனர்.
ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி யார்? இவர் என்ன செய்கிறார்? இவரின் வருமானம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
யார் இந்த அக்ஷதா மூர்த்தி?
இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான நாரயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரின் மகள் தான் அக்ஷதா மூர்த்தி. இவர் கலிபோர்னியாவில் உள்ள கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக்கத்தில் எம்பிஏ படித்தவர். படித்த பிறகு டெலாய்ட் மற்றும் யூனிலீவரில் பணியாற்றியுள்ளார். இது தவிர ஃபேஷன் படிப்பினையும் படித்துள்ளார்.
நான் டாம் அந்தஸ்து
படிக்கும் காலத்திலேயே ரிஷி சுனக்கினை சந்தித்தவர், 2009ல் திருமணமும் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிகளுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு பெண் குழந்தைகளும் உண்டு.
அக்ஷதா மூர்த்தி சமீபத்தில் நான் டாம் (non-domicile) என்ற அந்தஸ்தினை பெற்றபோது பலரின் கவனத்தினையும் ஈர்த்தவர்.
கடும் விமர்சனங்கள்
இது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டு குடிமக்கள், பிரிட்டனுக்கு வெளியே தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தான். இந்த நான் டாம் (non-domicile) அஸ்தஸ்தினை பயன்படுத்தி வரி செலுத்துவதை தவிர்த்ததாக அக்ஷதா மீது விமர்சனங்கள் எழுந்தன. எனினும் அதன் பின்னர் வரி செலுத்த ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
3 நிறுவனங்களில் இயக்குனர்
அக்ஷதா மூர்த்தி தற்போது மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். தனியார் ஈக்விட்டி நிறுவனமான கேடமரன் வென்ச்சர்ஸ், ஜெண்டில்மேன் ஆடைகள் நியூ & லிங்வுட் மற்றும் ஜிம் செயின் நிறுவனமான டிக்மே ஃபிட்னஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குனராக உள்ளதை அவரின் லிங்க்ட் இன் பக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.
பல நிறுவனங்களில் பங்குகள்
இது தவிர கேடமரன் வென்ச்சர்ஸ் மூலம் டிக்மே ஃபிட்னஸ், கேமியின் இத்தாலியன், நியூ & லிங்வுட், சொரோகோ மற்றும் வெண்டிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நேரடியாக பங்குகளை வைத்துள்ளார்.
இதில் நியூ & லிங்வுட் பாரம்பரிய பிரிட்டிஷ் பிராண்டாகும். இது இங்கிலந்தில் மட்டும் அல்ல, நியூயார்க்கிலும் தனது இருப்பினை கொண்டுள்ளது.
ரிஷி சுனக் வசம்
இதனை ரிஷி சுனக் அவர் தேர்தலில் போட்டியிடும் போது 2015ல் வெளியிட்டார். சுனக்கும் இந்த நிறுவனங்களில் பெரும் பங்கு வைத்திருந்த நிலையில், அவற்றில் பகுதியினை அக்ஷதாவுக்கு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ரிஷி சுனக் இங்கிலாந்து குடிமகனாக இருந்தாலும், அக்ஷதா இந்தியர் ஆவார்.
சொத்து மதிப்பு எவ்வளவு?
மொத்தத்தில் 42 வயதான அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 1.3 பில்லியன் டாலராகும். அக்ஷதாவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.9% பங்குகள் உண்டு. இதன் மூலம் கடந்த 2015ல் இருந்து அக்ஷாவுக்கு 71 மில்லியன் டாலர் டிவிடெண்டாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications