நீங்கள் தைரியமானவரா? அப்படி எனில் எவ்வளவு தைரியமானவர்? உலகின் மிக பயங்கரமான வேலை எது என என்றேனும் நினைத்தது உண்டா? என்றேனும் உங்களின் தைரியம் பற்றி சிந்தித்தது உண்டா? அதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படி எனில் இதனை சோதித்து பாருங்கள்.
உலகிலேயே எது பேய்கள் பற்றிய பயம் உலகெங்கிலும் இருந்து வருகின்றது. எனினும் வெளி நாடுகளில் பேய்கள் பற்றிய பயத்தினை போக்கவே ஹாலோவீன் திருவிழாவையே கொண்டாடுகின்றனர்.
அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படும் இந்த பேய்களின் திருவிழாவில், பேய்களை போல உடையணிந்து கொண்டு பயமுறுத்துவார்கள். இந்த விழாவானது இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடுவர்கள்.
உலகின் மிக பயங்கரமான வேலை
இங்கிலாந்தில் இது குறித்த அதிகாரப்பூர்வமாக பயமுறுத்தும் பணி குறித்த அறிவிப்பினை (Halloween) வெளியிட்டுள்ளது. இது தான் உலகின் மிக பயங்கரமான வேலை என்று கூறப்படுகின்றது. சுற்றுலா பயணிகளை ஈர்க்க இதுபோன்ற திட்டமானது உள்ளது.
பணிக்கு விண்ணப்பம்
பிளாக்பூல், எடின்பர்க், யார்க் மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பகுதிகளில் பயணிகளை ஈர்க்கும் விதமான சில அரங்குகளைக் கொண்டுள்ளது. இங்கு பணி புரிய சிறந்த மன உறுதியுடன் கூடியவர்களை பணிக்கு அமர்த்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
என்ன வேலை இது?
தேர்தெடுக்கப்பட்ட பணியாளரின் அதிகாரப்பூர்வ பணியே பயமுறுத்துவதாக இருக்கும். இவர்கள் வரும் பயணிகளை பல்வேறு வகையிலும் பயமுறுத்த வேண்டும்.
பொதுவாக இதனை குழந்தைகளுக்கான ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரையில் அனைவரையும் பயறுத்தும் விதமாக பெரிய அறையில் நுழை வாயில் இருந்து, அதிலிருந்து வெளியே வரும் வரையில் திகிலூட்டும் விதமாக ஆங்காங்கே எலும்புக் கூடுகள், மண்டை ஓடுகள், அலறல் சத்தம், பேய் சிரிப்பதாக சிரிப்பலைகள் என பயமுறுத்தும் விதமாக ஆங்காங்கே இருக்கும். சூனியக்காரிகள் என இருக்கும். இவ்வாறு வேடமிட்டு வருபவர்களை பயமுறுத்துவதாக இருக்கும். இதுபோன்ற பணிகளுக்காகத் தான் இந்த பணியமர்த்தல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நிபந்தனைகள்
எனினும் இந்த பணியில் இணைய சில நிபந்தனைகளும் உண்டு. குறிப்பாக இந்த பணியில் இணைய விரும்புபவர், இங்கிலாந்தின் பிரதான பகுதிகளில் வசிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ரயில் மூலம் பயணிக்க வேண்டும். இதில் தங்குமிடம் மற்றும் வேறு எந்த செலவினங்களும் சேர்க்கப்படவில்லை. இது தவிர இன்னும் சில நிபந்தனைகளும் உள்ளன. எனினும் இதற்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்தான விவரங்கள் வெளியாகவில்லை.
மொத்ததில் நிச்சயம் இது ஒரு பயங்கரமான வேலையாகத் தான் இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications