முகேஷ் அம்பானி-யிடம் இருக்கும் 10 காஸ்ட்லியான பொருட்கள் எது தெரியுமா..??

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பணக்காரர்கள பட்டியலில் 10வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி 87 பில்லியன் டாலர் சொத்து மதிப்பினை கொண்டவர். இவரின் வணிகத்திற்காக மட்டும் அல்ல, சொகுசான ஆடம்பர வாழ்க்கைக்கும் பேர் போனவர் முகேஷ் அம்பானி.

 

இவரின் ராஜபோகமான வாழ்க்கையை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்று இந்தியாவிலேயே மிக ஆடம்பரமான வீட்டில் வசித்து வரும் முகேஷ் அம்பானி, இன்னும் பல ஆடம்பரமான சுவரஸ்யமான பொருட்களை பயப்படுத்தி வருகின்றார்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி டீ குடிக்கும் கப்பின் விலை 3 லட்சம் ரூபாயாம். இப்படி அவர் பயன்படுத்தும் காஸ்ட்லியான 10 பொருட்களின் பட்டியலை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

அம்பானி, அதானி-யை விட அதிகம் வரி செலுத்திய ரஜினி, அக்‌ஷய் குமார்? அம்பானி, அதானி-யை விட அதிகம் வரி செலுத்திய ரஜினி, அக்‌ஷய் குமார்?

அண்டிலியா (Antilia))

அண்டிலியா (Antilia))

மும்பையில் உள்ள விலையுயர்ந்த வீடுகளில் மிக ஆடம்பரமான, சொகுசு வசதிகளை கொண்ட வீடு அண்டிலியா. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் வீடாகும். இதன் இன்றைய மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபாயாகும். 27 மாடிகளை கொண்ட இந்த வீட்டில் ஹெலிபேட், ஹெல்த் கிளப், ஸ்பா, ஜிம், அவுட்டோர் கார்டன், சினிமா, பார்க்கிங், யோகா மையம், டேன்ஸ் ஸ்டுடியோ, ஐஸ் க்ரீம் பார்லர், கோவில் என சகல அம்சங்களையும் கொண்ட ஒரு மாட மாளிகையாக உள்ளது. இது மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான வசதிகளை கொண்ட இந்த வீட்டில் தான் முகேஷ் அம்பானியின் குடும்பம் வசித்து வருகின்றது.

ஸ்டோக் பார்க்

ஸ்டோக் பார்க்

கடந்த 2021ல் முகேஷ் அம்பானி தனது சொத்து பட்டியலில் 79 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டோக் பார்க்-கினை வாங்கினார். இது பிரிட்டனில் அமைந்துள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பார்க்கில் 27 கோல்ப் மைதானம், 13 டென்னிஸ் கோட், 3 உணவகம், 49 அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல என சகல அம்சங்களையும் கொண்டு, சொகுசு வசதிகளுடன் உள்ளது. இதனை அம்பானி, கிங் பிரதர்ஸிடம் இருந்து வாங்கினார். பிரிட்டனின் மிகப்பழமையான அம்சங்களில் ஒன்றாகும்.

மும்பை இந்தியன்ஸ்
 

மும்பை இந்தியன்ஸ்

சர்வதேச அளவில் உள்ள மிக காஸ்டலியான ஐபிஎல் டீம்களில் மும்பை இந்தியன்ஸ் ஒன்றாகும். கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அணி ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானதாகும். இதுவரை 5 முறை பட்டம் வென்றுள்ளது. இதனை முகேஷ் அம்பானி 111.9 மில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஹம்லேஸ்

ஹம்லேஸ்

லண்டனில் மிக புகழ்பெற்ற பொம்மை கடைகளில் ஒன்றான ஹாம்லேஸ் கடையினை, சுமார் 620 கோடி ரூபாய் முகேஷ் அம்பானி வாங்கினார். இது 259 ஆண்டுகள் பழமையான ஒரு பிரிட்டீஷ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 18 நாடுகளில் 167 கடைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 29 நகரங்களில் 88 கடைகள் உள்ளன.

போயிங் பிசினஸ் ஜெட் 2

போயிங் பிசினஸ் ஜெட் 2

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான போயிங் பிசினஸ் ஜெட் 2-ன் மதிப்பு சுமார் 73 மில்லியன் டாலராகும். உலகின் காஸ்ட்லியான வீட்டினை வைத்திருக்கும் பில்லியனர், விலையுயர்ந்து ஜெட்டினை வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. இது 95.2 சதுர மீட்டர் ;பரப்பளவினைக் கொண்ட ஆடம்பரமான வசதிகளை கொண்டதாகவும் உள்ளது. இதில் மாஸ்டர் சூட் வசதி கொண்ட படுக்கையறை, குளியலறையுடன் உள்ள ஒரு தனி ஜெட் ஆகும்.

ஏர்பஸ் ஏ319

ஏர்பஸ் ஏ319

கடந்த 2007ல் தனது காதல் மனைவி நீதா அம்பானிக்கு 44வது பிறந்த நாளில் பரிசாக முகேஷ் அம்பானி வழங்கியது தான் இந்த ஏர்பஸ் ஏ319. இதன் மதிப்பு 240 கோடி ரூபாயாகும். இந்த ஏர்பஸில் ஆபிஸ், கேம் கன்சோல்கள், மியூசிக் சிஸ்டம்ஸ், சேட்டிலைட் டிவி, வயர்லேஸ் தகவல் தொடர்புகள், படுக்கையறை என பல ஆடம்பர வசதிகளை கொண்ட ஒரு ஏர்பஸ் ஆகும்.

தி பால்கான் 900 இஎக்ஸ்

தி பால்கான் 900 இஎக்ஸ்

போயிங் பிசினஸ் ஜெட்டுடன் ஒப்பிடும்போது,தி பால்கான் 900 இஎக்ஸ் சிறிய ஜெட் தான். எனினும் பல சொகுசு அம்சங்களுடன் கூடியது. இது வணிகம் மற்றும் ஹாலிடே டிரிப்களுக்காக பயன்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். இதில் தனியாக ஒரு செஃப் உடன் உள்ள ஒரு ஜெட் ஆகும். இதிலும் மியூசிக் பிளேயர்ஸ், சேட்டிலைட் டிவி, வயர்லேஸ் தகவல் தொடர்புகள் என பல அம்சங்களை கொண்ட ஒன்றாகும். இதி; 12 பேர் பயணிக்க ஏற்ற ஒன்றாகும். இதன் செலவு சுமார் 33 கோடி ரூபாயாகும்.

 நோரிடேக் பழங்கால தேநீர் தொகுப்பு (ஜப்பான்)

நோரிடேக் பழங்கால தேநீர் தொகுப்பு (ஜப்பான்)


கடந்த 2010ம் ஆண்டில் நீதா அம்பானி தனது தனியார் ஜெட் விமானத்தில் மிக பழமையான ஜப்பானிய பிராண்டான நோரிடேக் பழங்கால பொருட்களை வாங்க இலங்கை சென்றார். இந்த பீங்கான் கிராக்கரி செட்கள் 22 காரட் தங்கம் மற்றும் பிளாட்டினம் விளிம்புகளை கொண்ட ஒன்றாகும். இதன் மதிப்பு 1.5 கோடி ரூபாயாகும்.

 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்

நடப்பு ஆண்டில் முகேஷ் அம்பானி நடப்பு ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரினை வாங்கினார். உலகின் மிக சொகுசு காராக கருதப்படும் இந்த விலை உயர்ந்த காரான இது, நடமாடும் மினி சொகுசு மாளிகை என்று கூறப்படுகின்றது. இந்த காரின் விலையானது 13.14 கோடி ரூபாயாக உள்ளது. பெட்ரோல் ரக காரான இதன் நம்பர் பிளேட் மட்டும் 12 லட்சம் ரூபாய் என கூறப்படுகின்றது.

பிஎம்டபள்யூ 760 Li

பிஎம்டபள்யூ 760 Li

முகேஷ் அம்பானியின் விருப்பமான கார் ரகங்களில் ஒன்று பிஎம்டபள்யூ 760 Li. இதன் மதிப்பு 8.5 கோடி ரூபாயாகும். பாதுகாப்பு அம்சம் பொருந்திய காரில், சொகுசு ரக கார்களில் ஒன்றாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know which are the 10 costliest items owned by Mukesh Ambani?

Do you know which are the 10 costliest items owned by Mukesh Ambani?/முகேஷ் அம்பானி-யிடம் இருக்கும் 10 காஸ்ட்லியான பொருட்கள் எது தெரியுமா..??
Story first published: Wednesday, July 27, 2022, 11:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X