சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி பெரும் பரபரப்புக்கு மத்தியில் மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி அமைக்க முதலும் முக்கிய காரணமாக இருந்தது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் மற்றும் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு டிடிபி கட்சிகள் தான். இதற்காக இந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு மிகப்பெரிய அளவிலான நிதியுதவி, சிறப்பு திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் என மோடி அரசு அள்ளி வீசியது.
ஆனால் தமிழ்நாட்டுக்கு எவ்விதமான நிதி ஒதுக்கீடும், சிறப்பு திட்டமும் அறிவிக்கவில்லை, சொல்லப்போனால் பட்ஜெட் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாறியது. இந்த நிலையில் மோடி அரசு தமிழ்நாட்டை மறந்துவிட்டு உலகில் பல நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க ரெடியாகியுள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருக்கக்கூடிய இந்தியா ஏழை நாடுகளுக்கு மற்றும் வறுமையில் வாடும் நாடுகளுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. அந்த நாடுகளில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக இந்த தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இதற்காக 22,155 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது 2023-24 ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 18,050 கோடி ரூபாயை விட சற்று அதிகமாகும். 2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி மத்திய அரசு ஏழ்மையில் உள்ள நாடுகளுக்கு என 6,541.79 கோடி ரூபாயை நிதி உதவியாக வழங்கியுள்ளது. இது பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 5,848 கோடி ரூபாயை விட அதிகமாகும்.
இந்த நிலையில் 2024-25ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு நிதி உதவியாக 5,667.56 கோடி ரூபாய் வழங்கப்படும் என மதிப்பீடு செய்துள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது. இந்தியா பெரும்பாலும் நமது அண்டை நாடுகளுக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் தான் நிதியுதவி அளிக்கிறது. அந்த வகையில் எந்தெந்த நாடுகள் இந்தியாவிடம் இருந்து எவ்வளவு தொகையை நிதியுதவியாக பெற உள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவிடம் இருந்து அதிக நிதி உதவி பெறக்கூடிய ஒரு நாடாக பூடான் இருக்கிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் பூடான் இந்தியாவிடம் இருந்து 2,068.56 கோடி ரூபாயை நிதியுதவியாக பெற இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு 2,400 கோடி ரூபாய் நிதி உதவியை பெற்றுள்ளது. பூடானுக்கு அடுத்ததாக இந்த பட்டியலில் இருப்பது நேபாளம். இந்த நாடு இந்தியாவிடம் இருந்து 700 கோடி ரூபாயை நிதி உதவியாக பெற இருக்கிறது.
மாலத்தீவு 400 கோடி ரூபாயை நிதி உதவியாக பெற உள்ளது. மொரிஷியஸ் 370 கோடி ரூபாய், மியான்மர் 240 கோடி ரூபாய், இலங்கை 265 கோடி ரூபாய், ஆப்கானிஸ்தான் 200 கோடி ரூபாய் , ஆப்பிரிக்க நாடுகளுக்கு 200 கோடி ரூபாய் என மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்திற்கு 120 கோடி ரூபாயும், செசல்ஸ் நாட்டிற்கு 40 கோடி ரூபாயும் வழங்கப்பட இருப்பதாக மத்திய பட்ஜெட் ஆவணங்கள் கூறுகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications