துபாய்: துபாய் என்ற உடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது பூர்ஜ் கலிஃபா கட்டடம் தான். உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் பூர்ஜ் கலிஃபாவின் தனித்துவமான வடிவமைப்பு காண்போர் கண்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
துபாய் நிலப்பரப்பில் இப்படி ஒரு வலுவான அதே வேளையில் அழகான ஒரு கட்டடத்தை கட்டுவது என்பது பல்வேறு சவால்களைக் கொண்டது. ஆனால் அதையெல்லாம் கடந்து தற்போது துபாயின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது பூர்ஜ் கலிஃபா.

துபாய் நகரம் பல்வேறு உயரமான கட்டடங்களுக்கும், நவீன ஐடியாக்களுக்கும் பெயர் போனது. இப்படிப்பட்ட துபாயின் அடையாளம் தான் பூர்ஜ் கலிஃபா. இது ஒரு கட்டடம் என்பதை தாண்டி துபாயின் வளர்ச்சியையும் துபாயின் தனித்துவத்தையும் உலகுக்கு வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு பூர்ஜ் கலிஃபா கட்டடம் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
முதலில் இது பூர்ஜ் துபாய் என அழைக்கப்பட்டது. ஆனால் அபுதாபியின் அதிபர் கலிஃபா பின் சையத் அல் நயானை கௌரவிக்கும் விதமாக இதற்கு பூர்ஜ் கலிஃபா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில் துபாய் நிதி சிக்கலில் சிக்கி தவித்த போது அதிலிருந்து மீண்டு வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர உதவியவர் கலிஃபா பின் சையத் அல் நயான்.
பூர்ஜ் கலிஃபா கட்டுமான 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. 2010ஆம் ஆண்டில் பணிகள் முடிந்து கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கிட்டத்தட்ட 2716.5 அடி உயரம் கொண்ட இந்த கட்டடம் 163 தளங்களைக் கொண்டுள்ளது. உலகின் உயரமான கட்டடம், உலகின் உயரமான தனித்து நிற்கும் ஒரு கட்டமைப்பு என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்த கட்டடம் முகமது அலாபார் என்பவருக்கு சொந்தமான Emaar Properties என்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமானது. துபாய் மால், துபாய் ஃபவுண்டெயின் உள்ளிட்ட துபாயின் அடையாளங்களை கட்டியது இந்த நிறுவனம்தான்.
Emaar Properties நிறுவனம் மூன்று கட்டுமான நிறுவனங்களை கொண்டு இந்த கட்டட பணிகளை மேற்கொண்டது. தென் கொரியாவை சேர்ந்த Samsung C&T நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த Arabtec நிறுவனம், பெல்ஜியத்தை சேர்ந்த BESIX என்ற நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தான் இதனை கட்டி முடித்தன.
பூர்ஜ் கலிஃபா கட்டடம் நீடித்த நிலைத்தன்மையை மனதில் வைத்து தான் கட்டப்பட்டிருக்கிறது. அதாவது இந்த கட்டடம் கிட்டத்தட்ட ஆண்டுக்கு 15 மில்லியன் கேலன் தண்ணீரை சேகரிக்கிறது. கட்டடத்தில் உள்ள அனைத்து தாவரங்களுக்கும் இந்த நீர் பயன்படுத்தப்படுகிறதாம்.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

துபாயில் சிக்கிதவிக்கும் பிரலங்கள்.. அமைச்சர் முதல் அஜித் குமார், நர்கிஸ் ஃபக்ரி வரை.. பெரிய லிஸ்ட் இருக்கு

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications