அமெரிக்கா: ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad, iMac உள்ளிட்ட தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதன் தனித்துவமான செயல் திறனுக்கும் வடிவமைப்புக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள்.
ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்யக்கூடிய கருவிகளின் பெயர்களுக்கு முன்னால் எப்பொழுதுமே 'i' என்ற எழுத்து இடம் பெறுகிறது. இந்த 'i' க்கு என்ன அர்த்தம் என்பதற்கு ஒரு சுவாரசியமான விளக்கம் இருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐமேக் கணினிகளை முதன் முதலில் அறிமுகம் செய்தது. தங்களுடைய லேண்ட்மார்க் ப்ராடக்ட் என ஆப்பிள் நிறுவனம் விளம்பரப்படுத்தியது.

அப்போது ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 'i' என்ற எழுத்து வெறும் எழுத்து மட்டும் கிடையாது அது ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஒவ்வொரு தயாரிப்புகளிலும் கொண்டிருக்கும் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கியது என கூறினார். 'i' என்ற எழுத்து "internet," "individual," "instruct," "inform," and "inspire" ஆகிய ஐந்தையும் குறிக்கிறது என விளக்கம் தந்தார்.
இன்டர்நெட் (Internet) - 'i' என்ற எழுத்து இன்டர்நெட் என்ற வார்த்தையுடன் இணைக்கப்பட்டு பார்க்கப்படுகிறது. முதன் முதலில் ஐமேக்கை அறிமுகம் செய்த போது உலகம் முழுவதும் இன்டர்நெட் வளர்ச்சி அடைந்து வந்த காலம். அப்போது இன்டர்நெட்டை உங்களுடைய அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக கொண்டு வருவதற்கு இந்த கருவி உதவும் என்ற அர்த்தத்தில் தான் ஐமேக் என பெயர் சூட்டினார்கள்.
தனித்துவம் (individual ) - ஆப்பிள் நிறுவன பொருட்கள் ஒவ்வொரு தனி நபர்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய திறன் கொண்டது என்பதை உணர்த்தும் வகையில் individual என்ற கோட்பாட்டினை பயன்படுத்துகின்றனர். பயனாளர்களுக்கு தேவையான தனித்துவமான அனுபவத்தை எங்களுடைய கருவிகள் வழங்கும் என்பதே இதன் அர்த்தமாகும். இந்த தனித்துவம் தான் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை மற்ற நிறுவன தயாரிப்புகளில் இருந்து வேறுபடுத்துகிறது.
வழிநடத்து (instruct): ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய கருவிகள் வெறும் கருவிகளாக மட்டுமல்லாமல் கல்விக்கான ஒரு கருவியாகவும் இருக்கும் என்பதே இப்படி குறிப்பிடப்படுகிறது. அதாவது பயனாளர்களுக்கு புதிய திறன்கள் கொண்டு சேர வேண்டும், கல்வி தொடர்பான செயலிகள் அல்லது டிஜிட்டல் சம்பந்தப்பட்ட கருவிகளை கொண்டு செல்வதற்கான ஒரு கருவியாக எங்களின் தயாரிப்புகள் இருக்கும் என்பதை குறிப்பிடுவதே அர்த்தமாகும்.
தகவல் அளித்தல்(inform): எங்கள் கருவிகள் பயனாளர்களுக்கு புதிய விஷயங்களை கொண்டு சேர்க்கும் என்கிறது ஆப்பிள். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் உங்களை அனைத்து விவரங்களை தெரிந்தவர்களாக வைத்திருக்கும் என்கிறது. உலகின் மூலை முடுக்கில் நடக்கும் விஷயங்களை உங்களுக்கு கொண்டு சேர்க்கிறோம் என்கிறது.
ஊக்கமளித்தல் (inspire): ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைவரையும் ஊக்கப்படுத்துபவை என கூறுகின்றனர். தொழில் ரீதியான வளர்ச்சி அடைய விரும்புபவர்களுக்கு உதவும் என்கின்றனர். அதுமட்டுமில்லாமல் புதிய புதிய தயாரிப்புகள் மூலம் புதுமைகளை புகுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் புகழ்பெற்றது. எனவே அனைவரையும் புதுமையை நோக்கி செல்ல ஊக்கம் தருகிறது.
தற்போது இந்த i உடன் intelligence என்ற வார்த்தையும் சேர்த்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டதாக தங்களின் கருவிகள் இருப்பதை இத்துடன் இணைத்து ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை விளம்பரம் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications