டெல்லி: இந்தியாவில் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக பெரும்பாலும் நிலக்கரியில் இருந்தே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அதிகளவு கரியமில வாயு வெளியேறுகிறது. இது புவி வெப்பமயமாதலை ஊக்குவிப்பதால் மாற்று எரிசக்தி முறைகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சூரிய சக்தியில் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் அணுசக்தி துறையிலும் மின் உற்பத்தியை அதிகரிக்க மெகா திட்டத்தை அரசு வகுத்துள்ளது. அணுசக்தி துறையில் கிட்டத்தட்ட 2.15 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வது குறித்து மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் பிரத்யேக செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி துறையின் பங்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால் நிலக்கரியை போல இதில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லை. மாறிவரும் காலச் சூழ்நிலையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விஷயங்களை நோக்கி இந்தியா உட்பட பல உலக நாடுகள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அணு சக்தி வாயிலாக மின்சாரத்தை அதிக அளவுக்கு தயாரிப்பது தேவையாக மாறிவிட்டது.
கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து , மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிப்பதை உறுதி செய்யும் வகையில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ள அரசு மிகவும் உறுதியாக உள்ளதால், தேசிய அணுமின் கழகம் தனியார் நிறுவனங்களுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்திக் குறிப்பு.
குறிப்பாக ரிலையன்ஸ் , டாடா , அதானி ,வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன் அரசு முதலீட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அணுசக்தி துறையில், முதன்முறையாக, இந்திய அரசு தனியார் முதலீட்டை அனுமதிக்க உள்ளது.
சட்டம் சொல்வது என்ன?: நமது நாட்டின் சட்டத்தின்படி தனியார் நிறுவனங்கள் அணு மின் நிலையங்களை அமைக்க முடியாது. ஆனால் அதற்கு தேவையான பொருட்கள், உபகரணங்களை வழங்கலாம் மற்றும் கட்டுமான பணி ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்.
மத்திய அரசு பிளான்: மத்திய அரசின் திட்டப்படி, தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையத்திற்கு வெளியே உள்ள நிலம், நீர் மற்றும் கட்டுமானங்களை மேற்கொள்ளும் என்றும் அணுமின் நிலையங்களை அமைத்தல் , செயல்படுத்துதல் மற்றும் எரிபொருள் மேலாண்மை ஆகியவற்றுக்கான உரிமை இந்திய அணுசக்தி கழகத்திடம் மட்டுமே இருக்கும் என தெரிகிறது. இதற்கு பிரதிபலனாக, அணுமின் நிலையத்தின் மின் விற்பனையில் இருந்து தனியார் நிறுவனங்கள் வருவாய் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில் தற்போதுள்ள சட்டத்தில் திருத்தங்கள் எதுவும் தேவைப்படாது.
முதலீடாக கேட்கும் அரசு: ஐந்து தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் தலா 44,000 கோடியை, அரசு முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த முதலீடுகள் மூலம் 2040க்குள் 11,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது அணுசக்தி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் மூலம் 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதலாக 1300 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு: தனியார் முதலீடு மூலம் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி நடைபெற்றால், 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகித மின் உற்பத்தி திறனை புதைபடிவம் அல்லாத எரிபொருட்களில் இருந்து பெற வேண்டும் என்ற இலக்கை அரசு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அணு மின் உற்பத்திக்கு தனியாரை நாடுவதற்கு எதிர்ப்புகள் கிளம்ப கூடும். ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
Article written by: Devika
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications