ரயில் பயணங்களின் போது கடைசி பெட்டியில் X எனும் எழுத்தை நம்மில் பலரும் கவனித்திருப்போம். எனினும், இதற்கு என்ன காரணம் என்பதை பலரும் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.
ரயிலின் கடைசி பெட்டியில் உள்ள X-க்கு என்ன அர்த்தம் என்பதை ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் தெளிவாக விளக்கி இருக்கிறது. ரயில்வேயின் இந்த விளக்கம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வாய்ப்புகளும் அதிகம்.
'X' எனும் எழுத்து
"உங்களுக்கு தெரியுமா? ரயில் பெட்டியின் கடைசி கோச்-இல் உள்ள 'X' எனும் எழுத்து, ரயில் தனக்கு பின் எந்த கோச்களும் இல்லாமல் கடந்து விட்டதை குறிக்கும்," என ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்திருக்கிறது. இதோடு மஞ்சள் நிறத்தில் X இடம்பெற்று இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
ஆதாவது எந்த ரயில் பெட்டியும் மிஸ் ஆகவில்லை என்பதை இந்த X காட்டுகிறது.
எதற்காக எக்ஸ்
இதற்கு The X Factor என்ற தலைப்பு ஒன்றையும் வழங்கியுள்ளனர். அதில், "'X' எனும் எழுத்து ரயிலியின் கடைசி கோச் என்பதை குறிக்கும். ரயில் தனக்கு பின் வேறு எந்த கோச்களையும் விட்டுச் செல்லவில்லை என்பதை ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்வர்." என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிரெண்ட்
இந்த பதிவு சமீபத்தில் இணையத்தில் டிரெண்டானது. ட்வீட் செய்ததில் இருந்து இந்த பதிவை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக வியூக்களை பெற்று இருக்கிறது. மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்த பதிவை சுமார் 4 ஆயிரத்து 100-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதுபற்றிய வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
"இது போன்ற எச்சரிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்ற போதிலும், கோச்-ஐ தனித்து விடும் சம்பவங்கள் பொதுவானதா என்ற கேள்வியும் எழுகிறது," என டுவிட்டரில் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவர், "அருமை, நான் இதற்கான முக்கியத்துவத்தை கண்டு வியந்திருக்கிறேன்," என பதிவிட்டுள்ளார். "அருமையான தகவல், இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிருங்கள்," என்று இன்னொருத்தர் கமெண்ட் செய்திருக்கிறார்.
ரியல் டைம் இருப்பிடம்
இந்திய ரியல்வே துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ரயிலின் ரியல் டைம் இருப்பிடத்தை தெரிந்துக்கொள்ளும் வகையில் இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைகோள் புகைப்பட தொழில்நுட்பத்தை கொண்டு அளிக்கப்பட உள்ளது. இப்புதிய திட்டம் கூட்டணி முறையில் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications