பெங்களூரு இந்திராநகரில் உள்ள பிரபலமான தி ராமேஸ்வரம் உணவகத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது. வைட்ஃபீல்டு பகுதியில் உள்ள தி ராமேஸ்வரம் உணவகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டு 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெடிவிபத்து காரணமாக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்திருக்கும் ராமேஸ்வரம் உணவகம் இதற்கு முன்பும் பேசு பொருளாக இருந்தது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆண்டுக்கு ரூ.50 கோடி வருமானம்: பெங்களூருவில் பிரபலமாக இருந்து வரும் உணவகங்களில் தி ராமேஸ்வரம் உணவகமும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் இந்த உணவகத்தை பற்றி தான் பலரும் விவாதித்து வந்தனர்.
இதற்கு காரணம் இந்த உணவகம் ஈட்டும் வருவாய். சமூக ஊடக பயனாளர் ஒருவர் , தி ராமேஸ்வரம் உணவகத்தின் வீடியோவை வெளியிட்டு அதன் வளர்ச்சி குறித்து பேசினார். அதில் ஒரு மாதத்திற்கு இந்த உணவகம் 4.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்றும், ஒரு ஆண்டில் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா தம்பதியினர் இணைந்து 2021இல் தி ராமேஸ்வரம் உணவகத்தை பெங்களூரு இந்திராநகரில் திறந்தனர். மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவாக அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தை கொண்டு தங்கள் கடைக்கு பெயர் சூட்டினர்.
ராகவேந்திர ராவ் 15 ஆண்டுகளாக உணவு துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர், திவ்யா, ஐஐஎம் அகமதாபாத்தில் முதுகலை பட்டம் பயின்றவர். அதுமட்டுமின்றி சிஏ முடித்துள்ளார். இருவரும் இணைந்து 2021இல் முதல் கடையை திறந்தனர்.
தென்னிந்திய உணவு வகைகளை பாரம்பரியம் மாறாமல் பரிமாறுவதால் இவர்கள் கடையில் எப்போதுமே கூட்டம் தான். காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை தான் கடை இருக்கும். இங்கு பரிமாறப்படும் நெய் பொடி இட்லி மற்றும் மசாலா தோசை, லெமன் இட்லிக்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிமை.
இந்த கடையில் ஒரு மாதத்திற்கு 4.5 கோடி வருமானம் மற்றும் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி சுமார் 200 பேருக்கு இவர்கள் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளனர்.
விரைவில் பெங்களூருவின் மற்ற பகுதிகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடை திறக்கப்போவதாகவும் புதுப்புது உணவு வகைகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த தம்பதி கூறி இருந்தது.
அண்மையில் பிரபலமான மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் கேரி மிஹான் பெங்களூருக்கு வந்திருந்தார். அப்போது இந்த உணவகத்தில் வந்து தோசை உண்டு அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இது இந்த உணவகத்தை மேலும் பிரபலமடைய வைத்தது.
Story Written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications