உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் என்றால் அது இந்தியாவின் ரயில் நெட்வொர்க் தான். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நமது இந்திய ரயில்களில் பயணம் செய்கின்றனர் . மாவட்டத்திற்குள் செல்வது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வது என நமது போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், எளிதானதாகவும் மாற்றி இருக்கின்றன ரயில் போக்குவரத்துகள்.
நமது இந்திய ரயில்வே மூலம் நாம் வெளிநாடுகளுக்கு கூட நாம் சென்று வர முடியும் தெரியுமா. நமது இந்தியாவில் உள்ள ஏழு ரயில் நிலையங்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு உள்ளது. இந்த ரயில் நிலையங்கள் வழியே நாம் இந்திய எல்லை கடந்து பயணிக்கலாம்.

பெட்ராபோல் ரயில் நிலையம்: பிரிட்டிஷ் ஆட்சியின் போது வங்கதேசத்தில் உள்ள குல்னா என்ற இடத்தில் இருந்து பாங்கோன் வழியே கொல்கத்தாவிற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் 1904 ஆம் ஆண்டு கிழக்கு வங்காள ரயில்வே அமைப்புடன் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
பெட்ரோ போல் ரயில் நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்திற்கும் இந்த ரயில் நிலையம் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகிறது. அதே போல உரிய விசா மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கும் இந்த ரயிலிலேயே பயணம் செய்ய முடியும்.
ஹல்திபாரி ரயில்நிலையம்: இந்தியா வங்கதேச எல்லையில் அமைந்திருக்கக்கூடிய மற்றொரு ரயில் நிலையம் இது . இந்தியாவையும் வங்கதேசத்தையும் இணைக்கக்கூடிய ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய எல்லையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிலாஹடி ரயில் நிலையம் வழியே வங்கதேசத்துக்கு செல்கிறது. இந்த ரயி ல் நிலையம் சென்றால் நாம் வங்கதேசத்தின் டாகா வரை சென்று வரலாம்.
ஜெய்நகர்: பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய ஜெய்நகர் ரயில் நிலையம் இந்தியா மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து நாம் நேபாளத்தின் ஜானக்பூரில் உள்ள குருதா ரயில்நிலையம் வரை பயணிக்க முடியும்.
அட்டாரி ரயில் நிலையம்: இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு ரயில் நிலையம் இது என நாம் கூறலாம். இந்த ரயில் நிலையம் பஞ்சாப் மாநிலம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த ரயில் பாதையில் இந்திய பகுதியில் அமைந்துள்ள கடைசி ரயில் நிலையம் இதுவாகும். வாகா எல்லையில் அமைந்திருப்பதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து ஆகியவற்றையும் கவனித்துக் கொள்ளக்கூடிய மிக முக்கிய ரயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது.
டெல்லி ஜங்ஷன்: பொதுவாக இது பழைய டெல்லி ரயில்வே நிலையம் என அறியப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான மற்றும் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒரு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திலிருந்து தான் பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையே பல்வேறு ரயில்கள் போக்குவரத்து நடைபெறுகிறது.
ராதிகாப்பூர் ரயில் நிலையம்: மேற்குவங்க மாநிலத்தின் உத்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வங்கதேச மற்றும் இந்திய எல்லைக்கு இடையே அமைந்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்திற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
ரக்சால் ஜங்ஷன் : பீகார் மாநிலத்தின் பிர்ஜங் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் ஒரு ரயில் நிலையம் ஆகும். நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கும் செல்வோர் பயன்படுத்தும் முக்கிய ரயில் நிலையம் இது.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications