சென்னை: உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பலரும் சாட் ஜிபிடி போன்ற ஏஐ சார்ந்த சாட்பாட்களிடம் தங்களுடைய ரகசிய தகவல்களையும் தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர். இது ஆபத்தானது என தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
சாட் ஜிபிடி: உங்களுடைய ரகசியங்களையும் தனிப்பட்ட தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என சாட்ஜிபிடி தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனே எச்சரிக்கை விடுத்து வருகிறார். சாட்ஜிபிடி சார்ந்து உங்களின் அனைத்து முடிவுகளையும் எடுப்பது மிக மோசமான ஒரு போக்கு என அவர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இந்த சூழலில் சாட் ஜிபிடியில் நாம் பகிரக்கூடிய தகவல்கள் நம்மை ஜெயிலுக்கு கூட அழைத்துச் செல்லும் என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜெயிலுக்கு போக வாய்ப்பு: Fawkes Solutions நிறுவனர் ஸ்ரேயா ஜெய்ஸ்வால் சாட் ஜிபிடி உங்களை ஜெயிலில் கொண்டு போய் அமர வைக்க போகிறது இது மிகத் தீவிரமான பிரச்சனை என குறிப்பிட்டு ஒரு பதிவினை லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் . அதில் அண்மையில் சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் நீங்கள் சாட்ஜிபிடியில் உள்ளிடும் எந்த ஒரு தகவலும் நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்தப்படலாம் என தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏன் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்து: அண்மையில் நீங்கள் பகிர்ந்த தகவல் மட்டும் கிடையாது பல ஆண்டுகளுக்கு பல மாதங்களுக்கு முன்னர் நீங்கள் டைப் செய்த தகவலை கூட நீதிமன்றம் கோரினால் சாட் ஜிபிடி வழங்கும் அது உங்களை சிறைவாசம் வரை அழைத்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவே ஏஐ செயலிகளிடம் நீங்கள் எந்த மாதிரியான விஷயத்தை பகிர்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் என கூறியிருக்கிறார். இதுபோன்ற தகவல்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் கிடையாது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதனை உங்களுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்த முடியும் என கூறியிருக்கிறார்.

நீதிமன்ற வழக்கு: உதாரணமாக நான் என்னுடைய கணவரையோ அல்லது மனைவியையோ ஏமாற்றி விட்டேன் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என்றால் உங்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது நீதிமன்றம் கோரினால் இந்த விவரங்கள் அங்கே பகிரப்பட்டு அந்த வழக்கே உங்களுக்கு எதிராக மாறும் வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
உங்களின் கேள்விகள் ஆதாரமாகும்: மேலும் நீங்கள் இந்திய வருமான வரி சட்டத்தில் என்னென்ன ஓட்டைகள் இருக்கின்றன அவற்றை எல்லாம் பயன்படுத்தி நான் எப்படி வரி சேமிக்க முடியும் என கேட்கிறீர்கள் அல்லது விஜய் மல்லையா போல வங்கியில் கடன் வாங்கி பெரிய பணக்காரராக வேண்டும் என உள்ளீடு செய்கிறீர்கள் என்றால் விளையாட்டுக்காக கேட்கக்கூடிய இந்த கேள்விகள் கூட பின்னாலில் உங்களை ஜெயலில் அமர வைக்கும் என ஜெய்ஸ்வால் எச்சரித்திருக்கிறார்.
சட்ட பாதுகாப்பு இல்லை: நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் அப்போது சாட் ஜிபிடியின் நான் தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வெளியேறி சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறேன், இங்கிருந்து அதற்காக என்ன கற்று கொள்ள வேண்டும் என யோசனை கேட்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், ஒருவேளை நீங்கள் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறீர்கள் அந்த சமயத்தில் நீங்கள் வேலை செய்த நிறுவனம் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் , நீங்கள் சாட் ஜிபிடியிட்ம் கேட்ட கேள்வி உங்களுக்கு எதிரான ஆதாரமாக மாறும் என கூறியுள்ளார்.
நீதிபதி முன்பு கூற முடியாத தகவல்: சாட்ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளிடம் நீங்கள் டைப் செய்யும் எதுவும் சட்டரீதியாக எந்த ஒரு பாதுகாப்பும் தராது எனக் கூறியிருக்கும் ஜெய்ஸ்வால், நீதிபதி முன்பு நீங்கள் எதை கூற வேண்டாம் என நினைப்பீர்களோ அவற்றை சாட்ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளிடமும் கூறாதீர்கள் என தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications