நகர்ப்புறத்தில் குறைந்தபட்ச முதலீட்டில் தொழில் தொடங்கி கூடுதல் வருமானம் பெறுவதற்கு இந்த வாகனத் தொழில் கை கொடுக்கும். வழக்கத்தில் உள்ள இந்தத் தொழிலில் குறைந்த முதலீட்டை செய்து அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம்.
ரூ.1 லட்சம் இருந்தால் போதும் கார் டீலிங் தொழிலை செய்துவிட முடியும். இந்தத் தொழிலுக்கு குறைந்த பணமே தேவைப்படும் என்பதால் பணத்துக்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. கூடுதலாக ஆட்டோமொபைல் டீலர்ஷிப்கள் ஒர்க்ஷாப் இருந்தால் நிலையான வருமானத்தை தரும்.

கார் டீலிங் பிசினஸ்ஸில் மாதம் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் லாபமாக சம்பாதிக்கலாம். உங்கள் ஒர்க்ஷாப்புக்கு அதிகளவில் கார் சர்வீஸுக்கு வர வேண்டும். ஒர்க் ஷாப் அமைக்க திறந்த வெளி இடம் வேண்டும். அத்துடன் நல்ல தண்ணீர் வசதி இருக்க வேண்டும். வாடகைக்கு ஒரு நிலத்தை வாங்கி ஒர்க் ஷாப் அமைக்கலாம்.
கார் மவுன்ட், ஜாக்கிகள், மினி கம்ப்ரஷர் ஜெட், 1 ஹார்ஸ்பவர் தண்ணீர் மோட்டார், பைப் செட் இருந்தால் போதும். இவை அனைத்தும் ஒரு முறை முதலீடு செய்தால் போதும். கார் வாஷிங், டிரையிங் கெமிக்கல்களை கம்பெனிகளிடமிருந்து கிரெடிட் முறையில் மாதாமாதம் வாங்கலாம். இருப்பினும் தொடக்க மாதத்தில் நீங்கள் செலவு செய்யும் பணம் கெமிக்கல்களின் தரத்தைப் பொறுத்து இருக்கும்.
கார்களை டீப் வாஷிங் சர்வீஸ் செய்ய ரூ.500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒருநாளைக்கு 10 கார்களை சர்வீஸ் செய்தால் மாதம் 300 கார்கள் என்ற கணக்கு வரும். 200 கார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட ரூ.500 வசூலித்தால் எளிதாக ரூ.1 லட்சம் சம்பாதித்து விடலாம்.
ஒரு காருக்கு டிரை கிளீனிங் சர்வீஸ் செய்ய ரூ.2000 முதல் ரூ.4000 வரை வசூலிக்கின்றனர். நாளொன்றுக்கு 3-4 கார்களை சர்வீஸ் செய்தால் மாதத்துக்கு 120 கார்கள் வருகிறது. ரூ.3000 சராசரியாக வசூலித்தால் மாதத்துக்கு ரூ.3.2 லட்சம் தேறும். இதை வைத்து பார்த்தால் மாதம் மொத்தம் ரூ.4.2 லட்சம் சம்பாதிக்கலாம்.
மெக்கானிக் சம்பளம், மற்ற ஊழியர்களுக்கான ஊதியம், எலக்ட்ரிக் பில், வாடகை, வாட்டர் பில் போன்றவற்றை கழித்தால் எப்படியும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மீதமாகும். இது நீங்கள் செய்த ரூ.1 லட்சம் முதலீட்டுக்கான வருமானம் ஆகும்.


Click it and Unblock the Notifications