ஐடி நகரமான பெங்களூருவில் சொத்து விலைகள் நினைத்த பார்க்காத அளவுக்கு உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேலைக்காக இங்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம். பெங்களூரு சிட்டிக்குள் சொத்து விலைகள் உயர்ந்து வருவதால், பலருக்கும் அங்கு சொந்தமாக வீடு வாங்குவது கனவாக மாறி வருகிறது. சரி வாடகை வீட்டிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால், வீட்டு வாடகையும் அதிகரித்த வருவது நகரவாசிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.
வீடு விற்பனை
பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு வந்தபோது, வாங்காமல் விட்டு விட்டதை நினைத்து இப்போது பலர் வருத்தப்படுகின்றனர். சமூக வலைதளமான ரெட்டிட்-ல் பயனர் ஒருவர், 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நண்பர் 3BHK கார்னர் பிளாட் ஒன்றை ரூ.1.8 கோடிக்கு விற்றார். அப்போது நான் அதை வாங்க தவறி விட்டேன். இப்போது அந்த ப்ளாட் விலை ரூ.3 கோடி.

கடந்த 2 ஆண்டுகளில் எனது வாடகை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் ரூ.3 கோடிக்கும் குறைவான 3BHK வீடுகள் இல்லை. அதிக வாடகை என்னை அழுத்துகிறது. மேலும் என்னால் ரூ.3 கோடி கொடுத்து வீடு வாங்க முடியாது என்று பதிவு செய்த இருந்தார். குறைந்த அளவிலான புதிய விநியோகம் (வீடுகள்) மற்றும் நகரத்திற்கு திரும்பும் நிபுணர்களின் தேவை அதிகரிப்பதால், பெங்களூருவில் ரியல் எஸ்டேட் மதிப்புகள் குறுகிய காலத்தில் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளன.
அதிக விலை
மேலும், வாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் சிலர் அதிக விலை கொடுத்து சொத்துக்களை வாங்குவதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம். சொந்த வீடு வாங்க முடியவில்லை என்பதற்காக நீண்ட காலம் வாடகை வீட்டில் வசிப்பது மோசமான நிதி முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று மற்றொரு பயனர் தெரிவித்தார்.
சிட்டிக்குள் வீடு வாங்கும் அளவுக்கு கையில் பணம் இல்லை என்பவர்கள் புறநகர் பகுதியில் தாரளமாக இடம் வாங்கி வீடு கட்டலாம் அல்லது கட்டிய வீட்டை வாங்கலாம் என்று ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனத பதிவில், வருங்கால வாங்குபவர்கள் சொத்துக்களை தேட வேண்டும், குறிப்பாக நகரத்தின் புறநகர்பகுதிகளில், அங்கு ஒப்பீட்டளவில் சொத்துக்கள் மலிவு விலையில் உள்ளன.
மன அமைதி
உங்கள் மன அமைதி விலைமதிப்பற்றது. மேலும் இஎம்ஐ செலுத்துவது பாவம் அல்ல. அது உங்கள் சொந்த வீட்டிற்கானது. நகர எல்லைக்குள் வீடு வாங்குவதில் பல சவால்கள் உள்ளன. ஆனால் நகரம் விரிவடைந்து மெட்ரோ இணைப்பு மேம்படும்போது, முககிய பகுதிகளிலிருந்து மேலும் வாங்குவது ஒரு புத்திசாலித்தனமான நீண்ட கால முடிவாக இருக்கலாம் என்று பதிவு செய்து இருந்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications