இந்தியாவின் மிக பிரபலமான பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஜெரோதாவின் இணை நிறுவனர் மற்றும் கோடீஸ்வரரான நிகில் காமத் WTF என்ற பெயரில் யூடியூப்-ல் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் Alcohol is a $70B Business in India?" என்ற தலைப்பில் வெளியான பாட்காஸ்ட், மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சி வெளியான பின் கல்லீரல் நிபுணர்களின் கடும் விமர்சனங்களுக்கு இவர் உள்ளாகியுள்ளார். அதன் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சமூக ஊடகங்களில் "The Liver Doc" என்று அழைக்கப்படும் கேரள மருத்துவர் சிரியாக் அப்பி பிலிப்ஸ், மது அருந்துவதன் மூலம், பக்கவாதம், புற்றுநோய், கல்லீரல் நோய்கள் மற்றும் மனநல பிரச்சனைகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று விமர்சித்துள்ளார்.

இந்த பாட்காஸ்ட்டில், ரேடிகோ கைத்தான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் கைத்தான், மதுவை தடை செய்த நாடுகள், தங்கள் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாகக் கூறினார். மேலும், "மிதமாக மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது" என்றும் அவர் கூறினார்.
கைடனின் கருத்துகளை மறுத்த, டாக்டர் பிலிப்ஸ் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஒரு விரிவான விளக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். அதிகமாக மது அருந்தினால் தான் உடல் நலக்குறைவு ஏற்பட வேண்டும் என்று அவசியமில்லை, ஏனென்றால் ஆல்கஹால் மனதிற்கு மட்டுமல்ல, உடலுக்கும் ஒரு விஷம். அது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் செல்கிறது. அது ஒவ்வொரு உறுப்புக்கும் செல்கிறது. மிகக் குறைவான ஆல்கஹால் கூட உங்கள் டிஎன்ஏவை (DNA) அழித்து புற்றுநோயின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார் .
குறைவாக குடிப்பது நல்லது என்று கூறப்படுவது, உண்மையில் ஒரு குற்றம். இது மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும், ஏனென்றால் அது நல்ல நோக்கத்திற்காக செய்யப்படவில்லை. மதுவை எப்போதாவது அருந்துபவர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. பின்னர் மதுவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மது அருந்துவதை ஆதரிக்கும் தொழிலதிபர்கள், மது தொடர்பான நோய்கள் ஏற்பட்டால், அதற்கான செலவுமிக்க சிகிச்சைகளை பெற முடியும். அனால் சாமானிய மக்களுக்கு அவை சிக்கலாக மாறி விடலாம்.
மது அருந்துவது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றாலும், மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து சிலருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனால் மருத்துவ உதவி பெற முடியாமல் பல ஏழை மக்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒவ்வொரு நபரும் தெரிந்து கொண்டாலே, எல்லாம் மாறிவிடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications