ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிகுள் பிற ரூபாய் நோட்டுகளுக்கு மாற்ற அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ வலியுறுத்தியுள்ளது.
ஆர்பிஐ செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதியாக அறிவித்தாலும், இந்த காலக்கட்டத்தை நீட்டிக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்பு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகுமா என்பது குறித்து ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கவில்லை.

எனவே மக்கள் அனைவரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவது உத்தமம். இந்த நிலையில் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி..? தேவையான ஆவணங்கள் என்ன..?
இந்தியாவில் அனைத்து வங்கிகளிலும் வங்கி கணக்குகளில் எவ்விதமான 2000 ரூபாய் நோட்டுகளை டெப்பாசிட் செய்ய எவ்விதமான புதிய கட்டுப்பாடுகளும் இல்லை. வழக்கம் போல் இது செயல்படும், இதேபோல் பணத்தை டெபாசிட் செய்யும் போது வங்கி நிர்வாகம் KYC கட்டாயம் உறுதி செய்யும் என்பதை உறுதி செய்யும்.
உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருந்தால் அருகில் இருக்கும் வங்கிகளுக்கு செல்லுங்கள், ஆர்பிஐ அறிவிப்பு மூலம் அனைத்து வங்கிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதாவது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் போது எப்படி ரூபாய் நோட்டுகளை மாற்றினோமோ அதே முறை தான் இப்போது கடைபிடிக்கப்படும்.
2000 ரூபாய் நோட்டை வாங்கிகளில் மாற்ற செல்லும் முன் ஆதார் கார்டு, பான் கார்ட், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாள ஆவணங்களை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

2000 ரூபாய் நோட்டை வாங்கிகளில் மாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் சென்று உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால், அதை கள்ள நோட்டுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய சோதனை செய்யப்படும். சோதனைக்கு பின் அடையாள ஆவணத்தை காட்டி கொடுத்த பணத்திற்கு மாற்று ரூபாய் நோட்டில் பணம் கொடுக்கப்படும்.
மே 23, 2023 முதல் ஒரு முறைக்கு அதிகப்படியாக 20,000 ரூபாய் வரையில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். அனைத்து வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் விட வேண்டாம் என ஆர்பிஐ அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் வங்கியில் இருந்து மக்கள் யாரும் 2000 ரூபாய் நோக்குகளை பெற வேண்டாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications