இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதிகளவில் பண புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 8, 2016 ஆம் ஆண்டு செல்லாது என அறிவித்து, இதற்கு மாறாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது.
பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்வது குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அதிகப்படியாக, நாட்டில் மொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் சுமார் 37.3 சதவீதத்துடன் 6.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டு பணபுழக்கத்தில் இருந்தது.

இந்த நிலையில் இன்று ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல் அல்லாமல் திட்டமிட்டு, மக்களுக்கு எவ்விதமான பிரச்சனையும், சுமையும் இல்லாமல் செப்டம்பர் 30, 2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு செப்.30 தேதிக்கு பின்பு செல்லுமா? செல்லாதா? என்ற கேள்வி எழுத்துள்ளது. ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ள போதுமான கால அவகாசம் அளிக்கும் திட்டத்துடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வங்கி கணக்குகளில் டெபாசிட் ஆகவோ அல்லது பிற ரூபாய் நோட்டுகளாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.
இதனால் ஆர்பிஐ செப்டம்பர் 30 ஆம் தேதி இறுதியாக அறிவித்தாலும், இந்த காலக்கட்டத்தை நீட்டிக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்பு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகுமா என்பது குறித்து ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கவில்லை.
எனவே மக்கள் அனைவரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவது உத்தமம்.
செப்டம்பர் 30, 2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும். மே 23, 2023 முதல் ஒரு முறைக்கு அதிகப்படியாக 20,000 ரூபாய் வரையில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.

அனைத்து வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் மத்தியில் புழக்கத்தில் விட வேண்டாம் என ஆர்பிஐ அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் வங்கியில் இருந்து மக்கள் யாரும் 2000 ரூபாய் நோக்குகளை பெற வேண்டாம்.
மக்கள் இந்தியாவில் இருக்கும் எந்த வங்கியிலும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வேறு டினாமினேஷன் கொண்ட ரூபாய் நோட்டுகளில் மாற்றிக்கொள்ளலாம்.
2000 ரூபாய் மாற்றிக்கொள்ளும் பணியில், வங்கி பணிகள் பாதிக்க கூடாது என்பதறக்காக 20000 ரூபாய் லிமிட் செட் செய்யப்பட்டு உள்ளது. இந்த 2000 ரூபாய் லிமிட் என்பது வேறு ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது மட்டுமே. வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யும் போது எவ்விதமான தடையும், கட்டுப்பாடு இல்லை. பொதுவாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் முறை தொடரும்.


Click it and Unblock the Notifications