மாமனார், மாமியார் சொத்தில் மருமகள் உரிமை கொண்டாட முடியுமா? கணவரின் சொத்தில் பங்கு உண்டா? சட்டம் சொல்வது என்ன?

இந்தியச் சட்டங்களில் சொத்து தொடர்பான விஷயங்களுக்கு மாமியார், மருமகள், கணவர், கணவரின் பெற்றோர், மனைவியின் பெற்றோர், அவர்களுடைய வாரிசுகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. இதில் மருமகளுக்கு தன்னுடைய கணவர் வீட்டு சொத்தில் என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றில் மருமகளுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது? மாமியார், மாமனார் சொத்தில் மருமகளுக்கு உரிமை உண்டா?, எந்த சூழ்நிலையில் மருமகளுக்கு சொத்து கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.

திருமணமான உடன் மாமனார், மாமியார் சொத்தில் மருமகள் உரிமை கோர முடியுமா?: திருமணம் ஆன உடனேயே ஒரு பெண் அவருடைய கணவரின் பெற்றோர் சொத்தில் உரிமையாளராக முடியாது. ஆனால் இந்தியச் சட்டங்களின்படி ஒரு மருமகள் தன்னுடைய கணவரின் வீட்டில் வசிப்பதற்கு உரிமை உண்டு.

மாமனார், மாமியார் சொத்தில் மருமகள் உரிமை கொண்டாட முடியுமா? கணவரின் சொத்தில் பங்கு உண்டா? சட்டம் சொல்வது என்ன?

கணவர் வீட்டில் வசிப்பதற்கான உரிமை, சொத்துரிமை மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றில் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாமனார் அல்லது மாமியாரின் பெயரில் ஒரு வீடு இருந்தால் அந்த வீட்டிற்கு மருமகளாக சென்றவர் உரிமை கோர முடியாது. ஆனால் அங்கு வசிப்பதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சொத்துரிமை என்பது சட்டபூர்வமாக அந்த சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதற்கான பத்திரம், வாரிசுரிமை மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையிலேயே இருக்கும்.

Also Read

சொத்துரிமை வேறு.. வசிக்கும் உரிமை வேறு. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005-இன் கீழ் திருமணமான பெண் தன் கணவரின் குடும்பத்துடன் சேர்ந்து தங்குவதற்கு உரிமை உண்டு. இந்த உரிமை கணவருக்கு சொந்தமான சொத்துக்கு மட்டும் கிடையாது. அவருடைய குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் ஒரு சொத்து இருந்தாலும் அந்த வீட்டிலும் திருமணம் ஆன பெண் தங்க முடியும். இது அந்தப் பெண் வசிக்கும் உரிமையே தவிர அந்த வீட்டின் முழு உரிமை கிடையாது.

கணவருடைய சொத்தில் மனைவிக்கு உரிமை உண்டா?: ஒரு மனைவி தன் கணவர் உயிருடன் இருக்கும் போது அந்த சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது. அவர் உயிருடன் இருந்து.. சட்டபூர்வமான வேறு உரிமைகள் இல்லாதவரை அவருடைய சொத்தை அவர் மட்டுமே அனுபவிக்க முடியும். ஒரு வேளை அந்த கணவர் இறந்துவிட்டால் வாரிசுரிமை சட்டங்களின் அடிப்படையில் மனைவி மற்றும் வாரிசுகளை சென்றடையும். இதுவும் அந்த சொத்தின் தன்மை மற்றும் உயில் ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம். இறந்த நபர் உயில் எழுதி இருந்தால் அவருக்கே அந்த சொத்து சேரும்.

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-இன் கீழ் உயில் எதுவும் எழுதாமல் கணவர் இறந்து போனால் மனைவி, தாய், குழந்தைகள் என அனைவருக்கும் சொத்து பிரித்து வழங்கப்படும். இது கணவருடைய சொத்துக்கு மட்டுமே பொருந்தும். கணவரின் குடும்பத்தினர் வைத்திருக்கும் சொத்துகளுக்கு பொருந்தாது.

கணவரின் குடும்பச் சொத்தில் மனைவிக்கு உரிமை உண்டா?: இந்து கூட்டுக் குடும்பத்தில் திருமணம் ஆகி செல்லும் பெண் வாரிசுதாரராக மாறுவதில்லை. ஆனால் கணவரின் குடும்பத்திற்கு பூர்வீக சொத்து இருந்து அதில் அவருக்கும் பங்கு இருந்தால் சில வாரிசுரிமை சட்ட விதிகளின்படி கணவருடைய பங்கை பெறுவதற்கு மனைவிக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் சூழ்நிலை அடிப்படையில் மாறுபடலாம்.

கணவரை இழந்த பெண்ணாக இருந்து அவரால் சுயமாய் தன்னை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் இந்து பராமரிப்புச் சட்டம் 1956-இன் கீழ் தனக்கு தேவைப்படும் பராமரிப்புச் செலவுகள் மற்றும் குடியிருப்பதற்கான உரிமையைப் பெற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை வைத்து மருமகள் கணவருடைய சொத்தில் உரிமை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+