இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமம் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் வேளையில் சில வருடங்களுக்கு முன் ரீடைல் வர்த்தகம், டிஜிட்டல் சேவைகளுக்குள் இறங்குவதற்கான முயற்சிகளில் அதானி குழுமம் இறங்கியது.
இப்பிரிவில் அதானி குழுமத்தின் முயற்சிகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் படி IRCTC-க்கு போட்டியாக ரயில் டிக்கெட்களை விற்க கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம் களத்தில் இறங்கியுள்ளது. ஆனால் இதை எப்படி செய்ய போகிறது என்பது தான் முக்கியம்.

கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசர்ஸ்-ன் கிளை நிறுவனமான அதானி டிஜிட்டல் லேப்ஸ், தற்போது இந்தியாவில் டிரைன் புக்கிங் சேவை தளமான Trainman-ஐ இயக்கும் Stark Enterprises நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
குர்கிராம் பகுதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Stark Enterprises நிறுவனம் ஐஆர்சிடிசி தளத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒரு ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிக் தளமாகும். இந்த டிரைன்மேன் நிறுவனத்தை ஐஐடி ரூக்கி கல்லூரியின் முன்னாள் மாணவர்களான வினித் சிரானியா, கரண் குமார் ஆகியோர் இணைந்து உருவாக்கினர்.
Trainman-ஐ இயக்கும் Stark Enterprises நிறுவனம் சமீபத்தில் 1 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் இந்த ரயில் டிக்கெட் புக்கிங் தளத்தை வாங்கியதன் மூலம் அதிகப்படியான ரயில் டிக்கெட்-ஐ விற்க வாய்ப்பு உள்ளது.
மேலும் Trainman கட்டமைப்பை அடிப்படையாக வைத்து அதானி குழுமம் விமான டிக்கெட், பஸ் டிக்கெட் புக்கிங் சேவை கூட கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையில் இறங்கவும் வாய்ப்பு உள்ளது.
இதில் முக்கியமான Trainman கட்டமைப்பு மூலம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களில் பல்வேறு சேவைகளை மக்களுக்கு அளிக்க முடியும். இந்த நிறுவன கைப்பற்றல் மூலம் அதானி குழுமத்தின் சூப்பர் ஆப் பயணத்தில் அடுத்த முக்கிய படியாக அமையும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications