தமிழ்நாடு முழுவதும் நாளை அதிதீவிர கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளதால், தமிழ்நாடு அரசு அக்டோபர் 16, புதன்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்ரேஷன்கள், நிர்வாக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை மூடப்படும்.
எனினும், வங்கிகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளதால். மழை வெள்ளமாக இருந்தாலும், முக்கியமான வங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் மக்களுக்குச் சேவை அளிக்க வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கும். சரி, அத்தியாவசிய சேவைகள் என்றால் அதில் என்னவெல்லாம் வரும்.

அத்தியாவசிய சேவைகள் பிரிவில் போலீஸ், தீயணைப்புத்துறை, உள்ளாட்சிகள், பால் விநியோகம், குடிநீர் விநியோகம், மருத்துவமனைகள்/ மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரம், காய்கறிகள், பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து, போக்குவரத்து, MTC, MRTS, CMRL, ரயில்வே, விமான நிலையம், விமான சேவைகள், துறைமுக சேவைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள்/ரெஸ்டாரண்டுகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும், பேரிடர் மீட்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் அனைத்து கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்படும். அரசு அலுவலகங்களும், பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமே நாளை விடுமுறை.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாகச் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கனமழையை கருத்தில் கொண்டு, சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு இம்மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மிகப்பெரிய மழையொட்டி, சென்னை மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications