மும்பை பங்குச்சந்தை இன்று பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு தடுமாறினாலும், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் துவங்கியதிற்குப் பின்பு தொடர்ந்து உயர்ந்தது.
இந்தப் பட்ஜெட் அறிவிப்புகள் சாமானிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரிய அளவில் சாதகமாக இருக்கும் அறிவிப்புகள் இல்லை என்றாலும், முதலீட்டுச் சந்தைக்கும், வர்த்தகச் சந்தைக்கும் பல அறிவிப்புகள் சாதகமாக உள்ளது.
இதனால் பல முக்கியத் துறைகள் இன்றும், இனி வரும் காலத்திலும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்ய உள்ளது.
உள்கட்டமைப்பு
மத்திய அரசு உள்கட்டுமான திட்டங்களுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் மூலதன செலவு 34 சதவீதம் அதிகரித்து 7.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் நிறுவனங்கள் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்றுள்ளது.
ஸ்டீல் நிறுவனங்கள்
2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு அடுத்த 3 வருடத்தில் புதிய தலைமுறை 400 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில் தயாரிப்புகள் ஸ்டீல் தேவை அதிகரிக்கும் நிலையில் ஸ்டீல் நிறுவன பங்குகள் தாறுமாறாக உயரத் துவங்கியுள்ளது.
பிளாஸ்டிக் பைப்
இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பைப் வாயிலாகக் குடிநீர் கொண்டு சேர்க்கும் நல் சே ஜல் யோஜனா திட்டத்திற்கு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் சுமார் 60000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பினோலெக்ஸ், சான்கோ இண்டஸ்டீர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் 4.7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
நிதி நிறுவனங்கள்
மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதாவது MSME நிறுவனங்களுக்கு அவசரக் கால நிதி உதவி திட்டமான ECLGS மார்ச் 2023 வகையில் நீட்டிக்கப்படும் என 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் கொரோனா, ஒமிக்ரான் தொற்றால் வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்ட நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் உதவும். இதேவேளையில் நிதித் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அடுத்த ஒரு வருடம் கூடுதல் கடன் வர்த்தகம் கிடைக்கும்.
முக்கியத் துறை
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி FMCG குறியீடு 1.68 சதவீதமும், நிஃப்டி ஐடி குறியீடு 1.27 சதவீதமும், நிஃப்டி மெட்டல் குறியீடு 2.47 சதவீதமும், நிஃப்டி பார்மா குறியீடு 1.68 சதவீதமும், நிஃப்டி ஹெல்த்கேர் குறியீடு 1.64 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
ஆட்டோமொபைல், மீடியா, பொதுத்துறை வங்கி, ஆயில் அண்ட் கேஸ் குறியீடுகள் சரிவை சந்தித்துள்ளது.
பங்குச்சந்தை சரிவு
ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள பல திட்டங்கள் நீண்ட காலத் திட்டமாக இருக்கும் காரணத்தால் பட்ஜெட் அறிவிப்பு முடிந்த பின்பு சென்செக்ஸ் குறியீடு தடாலடியாக 57,737 புள்ளிகளுக்குச் சரிந்தது.
இதன் பின்பு மெல்ல மெல் உயர்ந்து தற்போது 645.14 புள்ளிகள் உயர்வில் 59,659.31 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications