டெல்லி: அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்திருப்பது இந்தியாவை சேர்ந்த பல்வேறு துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு புறம் இதன் மூலம் ஒரு நன்மையும் நடந்திருக்கிறது . இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மீண்டும் நெருங்கி வர தொடங்கியுள்ளன.
அமெரிக்கா இந்தியா மீது தொடுத்துள்ள வரி விதிப்பு நடவடிக்கை நியாயமற்ற செயல் என சீனா வெளிப்படையாகவே இந்தியாவுக்கு ஆதரவான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் இரு நாடுகளுக்கும் இடையினான பிரச்சனைகளை படிப்படியாக பேசி தீர்த்த வண்ணம் இருக்கின்றன.

சுற்றுலா விசா வழங்குவது குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இருந்த ஏற்றுமதி இறக்குமதி தடைகளை நீக்குவது என இந்தியா சீனா இடையிலான உறவில் இருந்த விரிசல் மெதுவாக நீங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீன அதிபர் இந்திய அரசுக்கு எழுதிய ஒரு ரகசிய கடிதம் தான் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ப்ளூம்பெர்க் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் சீன அதிபர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மார்ச் மாதத்தில் ஒரு கடிதம் எழுதினாராம். அதில் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கியமான கவலைகள் எழுப்பப்பட்டு இருந்ததாம். இந்த கடிதம் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி சுட்டிக்காட்டுகிறது.
சீன அதிபர் இந்த கடிதம் எழுதிய மார்ச் மாதத்தில் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல் உச்சத்தில் இருந்தது. இந்த கடிதம் வந்த பிறகு தான் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் இருந்த கடினமான போக்கு மாறி இருக்கிறது. இருந்தாலும் இந்தியா ஒரு புறம் அமெரிக்கவிடம் வர்த்தக பேச்சுவார்த்தையும் நடத்தியது, ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது.
டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்து எதிர்ப்பை சம்பாதித்து கொண்டார். இதனால் சீனா இந்தியா இடையே உறவு மீண்டு மலர்ந்து வருகிறது. இந்த கடிதம் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் சீனாவை சேர்ந்த தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவை விமர்சனம் செய்வது நிறுத்திக் கொண்டார்களாம். மாறாக இந்தியா சீனா இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வன் மோதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது .இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளும் பாதிக்கப்பட்டிருந்தன .பல்வேறு முக்கியமான பொருட்கள் இந்திய சந்தைக்குள் ஏற்றுமதி செய்யப்படாமல் சீன அரசாங்கம் துறைமுகங்களிலேயே தடுத்து வைத்திருந்தது. இந்த சூழலில் தான் தற்போது அந்த நிலைமை மாறியிருக்கிறது. இந்தியாவும் சீனாவும் மீண்டும் நெருங்கி வர தொடங்கி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications