குஜராத்: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்ட சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமான கிப்ட் சிட்டியில் (GIFT CITY - Gujarat International Finance Tec-City) போதிய முதலீட்டை ஈர்க்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிதி தொழில்நுட்ப மையமாக இந்த நகரம் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்நகரமே கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நகரம் உருவானதிலிருந்து தற்போது வரை பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

Tracxn என்ற நிறுவனம் 2024 இன் முதல் காலாண்டில் எந்தெந்த நகரங்கள் பின்டெக் துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன என்பதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 இடத்தில் குஜராத் தலைநகரான அகமதாபாத்-ம் இடம்பெறவில்லை, கிப்ட் சிட்டி-யும் இடம்பெறவில்லை.
Tracxn உருவாக்கிய பின்டெக் முதலீட்டு பட்டியலில் பெங்களூரு தான் முதலிடத்தை பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 247 மில்லியன் டாலர் முதலீட்டை பெங்களூரு பெற்றுள்ளது. மொத்த முதலீட்டில் இது 44% ஆகும்.
அடுத்ததாக மும்பை நகரம் 194 மில்லியன் டாலர் முதலீடு அதாவது 35% முதலீடுகளை ஈர்த்துள்ளது.ஹைதராபாத் 75 மில்லியன் டாலர்கள் முதலீட்டையும், குருகிராம் 19.7 மில்லியன் டாலர் முதலீட்டையும் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் குஜராத்தை சேர்ந்த ஒரே ஒரு நகரம் தான் இடம்பெற்றுள்ளது. அதாவது சூரத் நகரம் 5 மில்லியன் டாலர்கள் நிதியை மட்டுமே ஈர்த்துள்ளது. இந்தியாவில் நிதி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் முதலீடுகளை பெறுவது குறைந்திருப்பது இந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஃபின்டெக் ஸ்டார்ட் அப்கள் 1.3 பில்லியன் டாலர்களை முதலீடாக ஈர்த்த நிலையில், நடப்பு ஆண்டில் அது வெறும் 550 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இதுவே 2023 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் 346.7 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஓராண்டுக்கு முன்பு என பார்க்கும்போது அதாவது 2022ல் இது 537 டாலர்களாக இருந்துள்ளது.
இந்தியா 2027 ஆம் ஆண்டு ஐந்து ட்ரில்லியன் டாலர்கள் ஜிடிபி உடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறக்கூடும் என ஐஎம்எப் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் அண்மை காலமாகவே ஃபின்டெக் நிறுவனங்களுக்கான முதலீடுகள் அதிக அளவில் குவிந்ததே காரணம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருந்த ஃபின்டெக் நிறுவனங்கள் தற்போது அதில் சரிவை கண்டு வருவது இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், சாதகமான கொள்கைகள் ஆகியவை ஃபின்டெக் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை தருகிறது.
பேங்கிங் டெக்னாலஜி துறை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 85.8 மில்லியன் டாலர்களை ஈர்த்துள்ளது. இது கடந்த 2023 நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 187 சதவீதம் அதிகம் என தெரிய வந்துள்ளது. எனவே வங்கி கட்டமைப்புகளை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு தற்போது தேவை இருப்பதை உணர்த்துவதாக இது இருக்கிறது என Tracxn நிறுவன ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குஜராத்தின் கிஃப்ட் சிட்டியை பொறுத்தவரை ஃபின் டெக் தலைநகராக மாற இன்னும் காலம் தேவைப்படும் என்றே தெரிகிறது. அதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications