காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில் இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் வழக்கமான 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பிரசிடெண்ட் ஆஃப் பாரத்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளதாக பதிவிட்டார்.
இந்த பதிவை தொடர்ந்து டிவிட்டரில் பிரசிடெண்ட் ஆஃப் பாரத் என்று அடையாளத்துடன் வந்த அழைப்பிதழ்களை மக்கள் போட்டோ எடுத்து பகிர துவங்கினர். இது அடுத்த சில நிமிடத்தில் ஒட்டுமொத்த இந்திய மக்களை வியப்பில் ஆழ்த்தியது. காரணம் இதுவரையில் எந்தொரு அரசும், இந்தியாவின் பெயரை பாரத் என அழைத்தது இல்லை.

இப்படியிருக்கையில் இந்தியாவில் பெயரை பாரதம் என மாறப்பட்டால் என்ன ஆகும்.. ரூபாய் நோட்டு முதல் பாஸ்போர்ட் வரையில்.. அரசு திட்டங்கள் முதல் சர்வதேச திட்டங்கள் வரையில் அனைத்திலும் பெயர் மாற்றம் அவசியமாகும்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தலைமையில் இந்தியாவில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டிற்கான சிறப்பு விருத்து அழைப்பிதழில் பிரசிடெண்ட் ஆஃப் பாரத் என குறிப்பிடப்பட்டு உள்ளது. செப்டம்பர் 18-22 வரை திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்றும் கருத்து நிலவுகிறது.
இந்திய சட்டமைப்பில் ஆர்டிகள் 1-ல் இந்தியா அதாவது பாரதம், மாநிலங்களின் கூட்டமைப்பு என கூறப்பட்டு உள்ளது. பாரதம் என்பது ஏற்கனவே மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் ஒன்றாக இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக யாரும், எதிலும் பயன்படுத்தியது இல்லை.
இந்த நிலையில் பாரத் என பெயர் மாற்றப்பட்டால் ரூபாய் நோட்டில் இருக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, பாஸ்போர்ட்-ல் இருக்கும் REPUBLIC OF INDIA என அனைத்தும் மாற்றப்பட வேண்டும். இப்போது தான் மத்திய அரசு இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றி நாட்டின் பணப்புழக்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது..
இந்த நிலையில் மீண்டும் இந்தியா என்பதை பாரத் என மாற்றப்படும் வரையில், மாற்றும் வேளையில் ரூபாய் நோட்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நிலை என்ன என்ற கேள்வி உள்ளது. இதேபோல் இந்த பெயர் மாற்றம் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.


Click it and Unblock the Notifications