ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை நல்ல விஷயங்களுக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறதோ அதே போல தவறான நடவடிக்கைகளுக்கும் பெருமளவில் பயன்படுத்த தொடங்கப்பட்டு விட்டது. புதுப்புது வழிகளை கண்டறிந்து மோசடி செய்து வந்த பல மோசடியாளர்களுக்கும் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறி இருக்கிறது.
அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் சிறந்த லாபம் கிடைக்கும் என பேசும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் 22,000 ரூபாய் முதலீடு செய்தால் 25 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறுவதை போல அந்த வீடியோ இருந்தது. இன்ஸ்டாகிராமில் பணம் செலுத்து பகிரப்பட்ட ஒரு விளம்பரமாக இது இருந்ததால் பலருக்கும் இது உண்மை தானோ என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் PIBfactcheck பிரிவினர் எக்ஸ் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் இது போலியான வீடியோ என விளக்கம் தந்தது. அதாவது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ மக்கள் இதனை நம்ப வேண்டாம் என கூறி இருக்கிறது. இருந்தாலும் வேறு வேறு வழிகளில் இத்தகைய போலி வீடியோக்கள் பகிரப்பட்டு தான் வருகின்றன.
டீப் ஃபேக் வீடியோக்கள் பெரிய ஆபத்தை ஏற்படுத்துபவையாகவே உள்ளன. இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இதன் மூலம் வருமானம் பார்ப்பது தான் மற்றொரு விஷயம். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் போன்ற செயலிகளில் தான் இத்தகைய போலி விளம்பரங்கள் அதிகம் வலம் வருகின்றன.
🚨 Beware of digitally-altered videos promoting investment platforms!
— PIB Fact Check (@PIBFactCheck) September 29, 2025
A video claims that Union Finance Minister @nsitharaman is promoting an investment platform, promising that an investment of ₹22,000 can help you earn up to ₹25.5 lakh per month.
#PIBFactCheck
❌ This… pic.twitter.com/lNaOS0T8uS
சாதாரணமாக பகிரும் வீடியோவாக இல்லாமல் பணம் செலுத்தி மோசடியாளர்கள் இந்த வீடியோகளை இன்ஸ்டாவில் விளம்பரம் செய்கின்றனர். அந்த வகையில் போலி விளம்பரங்களை கண்டறிந்து அகற்றி பொறுப்புடன் செயல்படாமல் அதன் மூலம் இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருமானம் பார்க்கிறது என்பதே உண்மை. இந்தியாவில் விளம்பர வருமானமே இன்ஸ்டாகிராமுக்கு பெரிய அளவில் வருமானம் பெற்று தருகின்றன. ஆனால் இவ்வளவு வருமானம் இருந்தாலும் இந்த நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்படத் தவறுகின்றன.
குறிப்பாக டீப் ஃபேக் வீடியோக்கள் பகிர்வு, பயன்பாடு இன்ஸ்டாகிராம் களத்தில் தான் அதிகமாக இருக்கிறது . சரியான முறையில் கன்டென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இல்லாததே இது போன்ற போலி வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு மக்கள் ஏமாறுவதற்கு காரணமாக இருக்கிறது என டெக் லெஜிஸ் எனப்படும் சட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைவரான சல்மான் வாரிஸ் தெரிவிக்கிறார். அவுட்லுக் பிசினஸ் பிரிவுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர் மோசடியாளர்கள் டீப்ஃபேக் முறையில் வீடியோக்களை உருவாக்குகிறார்கள் மத்திய நிதி அமைச்சரை கொண்டு இப்படி மோசடி விளம்பரங்களை அவர்கள் வெளியிடுகிறார்கள் அதனை பணம் இன்ஸ்டாகிராமை பொருத்தவரை இது தங்களுக்கு ஒரு வருமானமாக மட்டுமே பார்க்கிறது என கூறுகிறார்.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் கண்டன்ட் மாடரேஷன் பிரிவில் ஏஐ சார்ந்து இருப்பது தான் இது போன்ற தவறான வீடியோக்களை கண்டறிந்து அகற்ற முடியாமல் இருப்பதற்கு காரணம் என கூறுகிறார். மத்திய அரசு இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என கூறுகிறார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications