PF அப்டேட்: வேலையை விட்டு நின்றாலும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்குமா?

இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் ஓய்வு கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான் இபிஎஃப்ஓ அமைப்பு மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்திலும் மாதம் தோறும் ஒரு கணிசமான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது அதேபோல அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஊழியரின் பிஎஃப் கணக்கில் ஒரு பணத்தை வர வைக்கிறது.

மாதம் தோறும் வரவு வைக்கப்படக்கூடிய பணத்திற்கு வட்டியும் வழங்கப்படுகிறது. ஊழியர் ஓய்வு பெறும்போது இந்த pf கணக்கில் இருக்கக்கூடிய பணம் மிகப்பெரிய ஒரு நிதி பாதுகாப்பை தரும். தற்போது வேலைக்கு செல்லக்கூடிய பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு சந்தேகம் திடீரென என்னை வேலை விட்டு நீக்கி விட்டார்கள் அல்லது நான் சொந்த காரணங்களுக்காக வேலை விட்டு நின்று விட்டேன் எனும் போது என்னுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு தொடர்ந்து வட்டி கிடைக்குமா என்பதுதான்.

PF அப்டேட்: வேலையை விட்டு நின்றாலும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்குமா?

ஏனெனில் குறிப்பிட்ட அந்த நபர் வேலை விட்டு விலகிய பிறகு அவருடைய pf கணக்கில் புதிதாக பணம் வரவு வைக்கப்படாது. அப்படி புதிதாக பணம் வர வைக்கப்படாமல் இருந்தாலும் ஏற்கனவே டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்கிறது இபிஎஃப் அமைப்பு. அதாவது நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் சரி தனிப்பட்ட காரணங்களுக்காக வேலை விட்டு நின்றாலும் சரி உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு தொடர்ச்சியாக வட்டி என்பது வந்து கொண்டே இருக்கும்.

Also Read

தற்போது 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. கூட்டு வட்டி முறையில் இது கணக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணம் பெரிய அளவில் வளர்ந்து நிற்கும். எனவே நீங்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் 58 வயது ஆகும் வரை பிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும்.

Recommended For You

58 வயதான பிறகு நீங்கள் அந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது முன்கூட்டியே தேவைப்படுகிறது நீங்கள் மேற்கொண்டு வேலை செய்யப் போவதில்லை எனும் போது குறிப்பிட்ட மாதங்களுக்கு பின் , முறையாக விண்ணப்பம் செய்தும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் மூலம் மற்றும் யுபிஐ மூலம் எடுக்கும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை மிக எளிதாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+