அன்றே கணித்தார் விஜய்-யின் வாரிசு பட இயக்குனர்.. ரேமண்ட் குடும்பத்தில் நடப்பது இதுதானா..!

இந்திய வர்த்தகச் சந்தையில் பல முக்கிய விஷயங்களுக்கு மத்தியிலும் ரேமண்ட் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள் முக்கிய விவாத பொருளாக உள்ளது. ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்தது முதல் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடித்துத் தற்போது இக்குழுமத்தின் தலைமை பதவிக்கு மாற்று நபரைத் தேட வேண்டுமா என ஆலோசனை உருவாக்கியுள்ளது.

கௌதம் சிங்கானியா தீபாவளி பார்ட்டியின் போது தனது மனைவி நவாஸ் மோடியை வீட்டிற்குள் விடாமல் அவர் ரோட்டில் உட்கார்ந்தது முதல் பிரச்சனை வெடிக்கத் துவங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த வருடம் செப்டம்பர் 10 ஆம் தேதி மனைவி, பிள்ளைகளைக் கௌதம் சிங்கானியா அடித்தது. அதன் பின்பு அம்பானி குடும்பம் அவர்களைக் காப்பாற்றிய தகவலை நவாஸ் போட்டியில் தெரிவித்தது.

அன்றே கணித்தார் விஜய்-யின் வாரிசு பட இயக்குனர்.. ரேமண்ட் குடும்பத்தில் நடப்பது இதுதானா..!

இதன் பின்பு கௌதம் சிங்கானியா தந்தை விஜய்பத் சிங்கானியா-வின் பேட்டி பெரிய அளவில் வைரலானது. இந்தப் பேட்டியில் விஜய்பத் சிங்கானியா அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு மொத்தமாகச் சொத்துக்களையும் அளிப்பதற்கு முன்பு யோசித்துக்கொண்டு கொடுங்கள் எனப் பெரிய எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் நியாண்டர் செல்வன் என்பவர் பிசினஸ் பிஸ்தாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மனித பண்புகளையும், உறவுகளையும் மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். சும்மா பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது. இல்லையெனில் அது நமக்கே வினையாக வந்துமுடியும் எனப் பதிவிட்டு உள்ளார்.

இதேபோல் தான் விஜய் நடித்து வெளியான வாரிசு படத்திலும் சரத்குமார் தனது மூத்த மகன்கள் இருவருக்கும் பிஸ்னஸ்-ல் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்துவிட்டு உறவுகளையும், குடும்பத்தையும் மதிப்பதை முக்கியமெனக் கற்றுக்கொடுக்க மறந்தார். இதனால் மொத்த குடும்பமும் உடைந்தது, இந்த இடத்தில் தன் தளபதி விஜய் என்ட்ரி கொடுத்து மொத்த குடும்பத்தையும் ஒன்று சேர்த்தார்.

அன்றே கணித்தார் விஜய்-யின் வாரிசு பட இயக்குனர்.. ரேமண்ட் குடும்பத்தில் நடப்பது இதுதானா..!

விஜய் நடித்து வெளியான வாரிசு படம் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் கிட்டதட்ட இப்படத்தில் வரும் கதை தான் ரேமண்ட் குடும்பத்திலும் நடக்கிறது. கௌதம் சிங்கானியா 32 வருடமாகத் தன்னுடன் வாழ்ந்த மனைவியை விவாகரத்துச் செய்ததும், தனது சந்தையைச் சொந்த நிறுவனத்தில் இருந்து நீக்கியதும் ரேமண்ட் குடும்பத்தில் நடந்துள்ளது.

சிங்கானியா வீட்டில் நடக்கும் குடும்பப் பிரச்சனை, புதியது இல்லை, தற்போது கௌதம் சிங்கானியா - நவாஸ் மோடிக்கும் நடக்கும் பிரச்சனை போலவே தந்தை - மகனுக்கும் கௌதம் - விஜய்பத் சிங்கானியா மத்தியிலும் பிரச்சனை 2015ல் நடந்தது அப்போது மொத்த சொத்துக்களையும் கௌதம் சிங்கானியா கைப்பற்றினார்.

விஜய்பத் சிங்கானியா தற்போது ஓய்வுபெற்ற தொழிலதிபராக உள்ளார், சிறிய அளவில் துவங்கி ரேமண்ட் நிறுவனத்தை உலகம் போற்றும் பிராண்டாக மாற்றியவர். வர்த்தகத் துறையில் கொடிகட்டிப் பறந்த அவர் தந்தை - மகன் மத்தியிலான குடும்பச் சண்டையில் ரேமண்ட் குழுமத்தில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ளார்.

அன்றே கணித்தார் விஜய்-யின் வாரிசு பட இயக்குனர்.. ரேமண்ட் குடும்பத்தில் நடப்பது இதுதானா..!

2015ல் ரேமெண்ட் குழுமத்தில் இருந்து மொத்தமாக விஜய்பத் சிங்கானியா-வை வெளியேற்றிய பின்பு, 2017ஸ் பெற்றோர்களை JK வீட்டில் இருந்தும் வெளியேற்றினார் கௌதம் சிங்கானியா.

இதைத் தொடர்ந்து 2018ல் ரேமெண்ட் குழுமத்தின் சேர்மன் எமிரிட்டஸ் பதவியிலிருந்தும் விஜய்பத் சிங்கானியா-வை கௌதம் சிங்கானியா நீக்கினார். இதனால் ரேமெண்ட் குழுமத்தின் மொத்த அதிகாரத்தையும் கௌதம் பெற்றார்.

2015ல் குடும்பச் சண்டையின் ஒப்பந்தம் படி ரேமண்ட் குழுமத்தில் ஒரு பகுதியைத் தந்தைக்குக் கொடுப்பதாகவும், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மும்பையின் முக்கியமான இடத்தில் ஒரு வில்லா வீடு வாங்கித் தருவதாகக் கௌதம் சிங்கானியா ஒப்புக்கொண்டால் ஆனால் அதையும் செய்யவில்லை.

இப்போது தன் 85வது வயதில் மும்பையில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார் விஜய் சிங்கானியா. மாத செலவுகளைச் சமாளிக்க போதுமான பணம் இல்லாமல் வறுமையில் இருப்பதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+