இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பாடாதது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியிருத்தாலும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான விராட் கோலியின் ஆர்சிபி அணி 18 வருட போராட்டத்திற்கு பின்பு ஐபிஎல் கோப்பையை வென்று சரத்திரத்திடம் படைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இரவு மொத்த பெங்களூரும் தீபாவளி கொண்டாடியது என்றால் மிகையில்லை, RCB அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று நடக்க உள்ளது. அகமதாபாத்-ல் இருந்து பெங்களூருக்கு கிளம்பிய RCB அணியினர் இன்று மாலை திறந்த வெளி பேருந்தில் கோப்பையுடன் மக்களை சந்திக்க உள்ளனர். இதற்கு முன்பு மதியம் 1.30 மணிக்கு HAL விமான நிலையத்தில் இறங்கும் ஆர்பிஐ அணியினர் மாலை 4-5 மணிக்கு விதான சௌதா-வில் கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்திக்க உள்ளனர்.

இதை தொடர்ந்து விதான சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரையில் ஒப்பன் டாப் பஸ்-ல் ஆர்பிஐ அணியினர் மக்களை கோப்பை உடன் சாலைகளில் சந்திக்கின்றனர். 6 மணிக்கு சின்னசாமி மைதானம் வெற்றி கொண்டாட்டங்கள் நடக்கிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, ஐபிஎல் துவங்கி 18 வருடங்களுக்கு ஆன நிலையில் முதல் முறையாக கோப்பையை கையில் எடுத்துள்ள ஆர்பிஐ அணியின் வெற்றி பெங்களூருக்கும், பெங்களூர் பொருளாதாரத்திற்கும் எந்த அளவுக்கு உதவியுள்ளது தெரியுமா..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 2025 ஐபிஎல் பட்டத்தை வென்றது, பெங்களூரு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா, உள்ளூர் வணிகங்கள், RCB பிராண்ட் மதிப்பு, சமூக மேம்பாடு மற்றும் ஊடக வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த வெற்றி, பெங்களூரை ஐடி துறையை தாண்டி விளையாட்டு துறையிலும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வழிகளை திறந்துள்ளது.
சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறைக்கு ஜாக்பாட்: ஆர்சிபி அணியின் இந்த வெற்றி, அடுத்த ஆண்டில் அதிகப்படியான ரசிகர்களையும், பயணிகளையும் பெங்களூருக்கு ஈர்க்கும். குறிப்பாக பெங்களூரில் மேட்ச் நடக்கும் போதும் டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி, போக்குவரத்து துறைகள் ஆகியவை அதிகளவிலான வர்த்தகத்தை பெறும்.
மேலும் இன்று நடக்கும் வெற்றி கொண்டாட்டங்கள் மூலம் சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள கடைகளின் வர்த்தகத்தை அதிகரிக்கும், சின்னசாமி மைதானத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்கள், ஒப்பந்தாரர்களுக்கு இதன் மூலம் கூடுதல் வர்த்தகம் கிடைக்கும். இவை அனைத்தும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
நேற்றைய பைனல் மேட்ச் பெங்களூரில் நடந்திருந்தால் ஹோட்டல் ரூம் வாடகை, விமான கட்டணம் ஆகியவை பெரிய அளவில் அதிகரித்திருக்கும்.
பிராண்ட் மதிப்பு மற்றும் வணிக வாய்ப்புகள்: ஆர்சிபியின் வெற்றி, அணியின் பிராண்ட் மதிப்பை உயர்த்தி, புதிய ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மைகளை கிடைக்க செய்யும். இதேபோல் RCB பிராண்ட் பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும் RCB டிசர்ட் முதல் கீசெயின் வரையில் விற்பனை அதிகரிக்கும். உதாரணமாக நேற்று இரவு RCB வெற்றி பெற்ற உடன் பெங்களூர் மக்கள் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வாங்கி வெடித்து கொண்டாடினர். இதன் மூலம் OffSeason கொண்ட பட்டாசு கடைகளுக்கு இது ஜாக்பாட் ஆக அமைந்தது.
வேலைவாய்ப்பு: 2025 ஐபிஎல் போட்டியின் போது நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, ஆனால் இவற்றில் 85% குறுகிய கால ஒப்பந்த வேலைகளாகும். ஹோட்டல்கள், ஈவென்ட் மேனேஜ்மென்ட், பாதுகாப்பு, ஊடகம் மற்றும் வணிகப் பொருட்கள் விற்பனை துறைகளில் இந்த வேலைகள் உருவாகின. ஆனால் இவை பெரும்பாலும் தற்காலிகமானவை என்பது தான் வருத்தமான செய்தி. நீண்ட கால வேலைவாய்ப்பு மிகவும் குறைவு, இது நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்காது என்றாலும் குறுக்கிய கால ஊக்குவிப்புக்கு முக்கியமானதாக இருக்கும்.
ஆர்சிபியின் "மேட் ஆஃப் போல்டு விளையாட்டு மேம்பாட்டு திட்டம்" உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு நன்மை அளித்தது. ஆனாலும், ஐபிஎல்-க்காக மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்கள், பருவத்திற்கு பிறகு பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதை சரி செய்யும் பட்சத்தில் கூடுதல் வாய்ப்புகளும், வர்த்தகமும் உருவாகும். இதை செய்தால் பெங்களூரூ நிர்வாகம் ஆண்டு முழுவதும் விளையாட்டு மற்றும் சுற்றுலா மையமாக மாறலாம்.
ஆர்சிபி வெற்றி மற்றும் ஐபிஎல் சீசன் பெங்களூரின் பொருளாதார மற்றும் வர்த்தகத்திற்கு சாதகமாக இருந்தாலும், இது குறுகிய கால வளர்ச்சியே. நீண்ட கால நன்மைகளுக்கு தொடர் முயற்சிகள் தேவை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications