சர்வதேச சந்தையில் தடைகளும் நெருக்கடிகளும் ஒருபுறம் சூழ்ந்திருக்க, இந்தியாவுக்கான எரிசக்தி வேட்டையில் ரிலையன்ஸ் மீண்டும் களமிறங்கியுள்ளது ஜனவரி மாத இடைவெளிக்கு பிறகு, மீண்டும் பிப்ரவரி முதல் தினமும் 1,50,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பணியாமல், விதிமுறைகளுக்கு உட்பட்டு ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்க எடுக்கப்பட்ட இந்த முடிவு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த மாஸ்டர் பிளான், இந்திய எரிசக்தி துறையில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்த போகிறது. வர்த்தக உலகில் இது வெறும் கொள்முதல் அல்ல, இந்தியாவின் தேவையை உறுதி செய்யும் ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தடைகள்?
ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளரான ரோஸ்நெப்ட் (Rosneft) நிறுவனத்துடனான வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா வழங்கிய ஒரு மாத கால அவகாசத்தை பயன்படுத்தி, ரிலையன்ஸ் கடைசியாக டிசம்பர் மாதம் ரஷ்ய எண்ணெயை பெற்றது. முன்னதாக, ரோஸ்நெப்ட் உடனான ஒப்பந்தங்களை முடிக்க நவம்பர் 21-ஆம் தேதியை அமெரிக்கா காலக்கெடுவாக விதித்திருந்தது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என கடந்த அக்டோபர் மாதம், ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும், பொருளாதார தடைகளுக்கு ஆளாகாத பிற ரஷ்ய நிறுவனங்களும், வர்த்தக இடைத்தரகர்களும் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிப்ரவரி முதல் மீண்டும் எண்ணெய்?
இது குறித்து இந்தியா எரிசக்தி வார (India Energy Week) மாநாட்டின் இடையே பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், பிப்ரவரி மாதம் முதல் தடையில் இல்லாத விற்பனையாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு 1.5 லட்சம் பேரல் வரை ரஷ்ய கச்சா எண்ணெயை ரிலையன்ஸ் வாங்கும் என்று கூறியுள்ளார். நிறுவன கொள்கை காரணமாக தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அவர், அந்த விற்பனையாளர்களின் பெயர்களையும் குறிப்பிடவில்லை. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் இருப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான மறுப்போ அல்லது அறிவிப்போ வரவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு குஜராத் மாநிலத்தில் உள்ள நாள் ஒன்றுக்கு 14 லட்சம் பேரல் சுத்திகரிப்பு திறன் கொண்ட ஜாம்நகர் ஆலைக்காக, ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் நிறுவனத்துடன் நாளொன்றுக்கு 5,00,000 பேரல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தம் செய்திருந்தது. இது ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சவுதி அரேபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் வாங்குகிறது. இது தவிர கனடா நாட்டு எண்ணெயையும் ரிலையன்ஸ் கொள்முதல் செய்கிறது. இந்த சூழலில் ரஷ்யாவுடனான கொள்முதலை மீண்டும் தொடங்க போகிறதா, அப்படி இருந்தால் அது நிச்சயம் மிக நல்ல விஷயம் தான் என்றாலும், அமெரிக்காவின் தடையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications