சென்னை: உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் தனது உற்பத்தியை பெரிய அளவில் விரிவுபடுத்தி வருகிறது. உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதன் காரணமாகச் சென்னையில் 2 முக்கிய திட்டத்தைச் செயல்படுத்தி வருவது மூலம் பாக்ஸ்கான் சிட்டி சென்னையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
பாக்ஸ்கான் சென்னையில் சீனா பிளஸ் ஒன் கொள்கைக்கு இணங்க தொடர்ந்து முதலீடு செய்து வருவது மட்டும் அல்லாமல் அதன் உற்பத்தியை நிலையாக அதிகரிக்கும் வண்ணம், பல வருடமாக செயல்படுத்தி வரும் 230 மில்லியன் டாலர் முதலீட்டில் கட்டப்பட்டு வந்த டவுன்ஷிப் திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் 18000 ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டு உற்பத்தி பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதோடு இந்த டவுன்ஷிப்-ல் தங்க வைக்கப்படும் ஊழியர்களில் பெரும்பாலும் பெண்கள்.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பயணம் 2006 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது, இந்திய மொபைல் சந்தையில் முன்னணி வகித்த நோக்கியா நிறுவனத்திற்காகச் சென்னையில் மொபைல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவியது. ஆரம்பக்கட்ட செயல்பாடுகள் மிதமானதாக இருந்தாலும், 2017 ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐபோன் மற்றும் பிற பிராண்டுகளுக்கான ஸ்மார்ட்போன் உற்பத்தியை ஃபாக்ஸ்கான் தொடங்கியது.
இந்த நிலையில் அமெரிக்க - சீனா வர்த்தக போருக்கு மத்தியில் உருவான சீனா பிளஸ் ஓன் கொள்கை இந்தியாவில் ஆப்பிள் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது. இதில் வெடித்த புரட்சி தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் பாக்ஸ்கான் சிட்டி அமைப்பதற்கான நிலைக்கு உயர்ந்துள்ளது.
ஸ்மார்ட்போன் வர்த்தகத்தைத் தாண்டி ஃபாக்ஸ்கான் தனது இந்தியச் செயல்பாடுகளைப் பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்து வருகிறது, இதிலும் தமிழ்நாடு முக்கியத்துவம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டைத் தாண்டி பாக்ஸ்கான் பெங்களூரு அருகே புதிய தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. ஹைதராபாத் அருகே ஒரு நவீன தொழிற்சாலை விரைவில் ஏர்பாட்ஸ் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
மேலும், வேதாந்தா குழுமத்துடனான தனது கூட்டு முயற்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஃபாக்ஸ்கான் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் மற்றும் சோதனை வசதியை நிறுவ நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான HCL தற்போது உடன் இணைந்துள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் அல்லது குஜராத்தில் அமையும் என பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.
இவை அனைத்தும் ஒருப்பக்கம் இருக்க பாக்ஸ்கான் தனது அடுத்த தலைமுறை திட்டமும், கனவுமான மின்சார வாகன (EV) உற்பத்தி திட்டத்தில் ஒரு பகுதியாக, ஃபாக்ஸ்கான் பேட்டரி தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. இதற்காகத் தமிழ்நாட்டில் பேட்டரி எனர்ஜி சேமிப்பு அமைப்பு (BESS) தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறது. இது உலகளவில் பாக்ஸ்கானின் இரண்டாவது தொழிற்சாலையாகும்.
ஆகஸ்ட் 2024 நிலவரப்படி இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. ஐபோன்கள் தவிர, ஐபேடுகள், ஏஐ சர்வர்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட தனது தயாரிப்புகளை இந்தியாவில் விரிவுபடுத்தி வருகிறது.
பல இந்திய மாநிலங்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்க்கவும், பெரிய அளவிலான உற்பத்தி மையங்களை நிறுவவும் தீவிரமாகப் போட்டிப்போட்டு வருகின்றது. தெலுங்கானா மாநிலம் "ஃபாக்ஸ்கான் சிட்டி" அமைக்க 2,000 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் தொழில்துறை பூங்காவுக்கு 2,500 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. கர்நாடகா மாநிலமும் சப்ளையர் பூங்காவுக்காக 300 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.
ஃபாக்ஸ்கானின் இந்திய விரிவாக்கத்தில் ஒரு முக்கியமான மைல்கல், அதன் துணை நிறுவனமான யுஷான் டெக்னாலஜி, தமிழ்நாட்டில் புதிய பிரிவு ஒன்றில் ரூ.13,180 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இந்தியாவில் முதன்முறையாக, ஆப்பிள் நிறுவனத்திற்காக ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாடியூல்களை இணைக்கும் பணி மேற்கொள்ள உள்ளது.
இப்படி பேட்டரி தயாரிப்பு, ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாடியூல் என்ற இரு முக்கிய திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் காரணத்தாலும், விடுதி வசதிகள் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு வரும் வேளையில் சென்னையில் பாக்ஸ்கான் சிட்டி அமைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாக்ஸ்கான் சீனாவில் Zhengzhou என்னும் பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக பாக்ஸ்கான் சிட்டி அமைத்துள்ளது. இதே மேஜிக்-ஐ சென்னையிலும் செயல்படுத்துமா..? காத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications