சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் மத்திய பட்ஜெட் 2026-27ஐ மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் நாள் மூலம் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி தனது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வேளையில், 2026இல் பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டப்படி பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்-ஐ தாக்கல் செய்வாரா அல்லது வேறு நாளில் தாக்கல் செய்யப்படுமா என்பது தற்போது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

மத்திய அரசு 2017 முதல் பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்து வருகிறது. 2017இல் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பட்ஜெட் தேதியை பிப்ரவரி 1ஆக மாற்றினார். அதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்பட்டது.
முந்தைய கட்டமைப்பில் வோட் ஆன் அக்கவுன்ட் மூலம் முதல் சில மாத செலவுக்கு அனுமதி பெறப்பட்டது, பின்னர் முழு பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. இந்த செயல்பாடு கடினமாக இருக்கும் காரணத்தால் பிப்ரவரி 1 தேதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மார்ச் இறுதிக்குள் பட்ஜெட் ஆலோசனைகள் முடிந்து பட்ஜெட் அறிவிப்புகள் நிறைவேற்ற உதவியது. இதன் மூலம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமைச்சகங்கள் எவ்விதமான தடையுமின்றி ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையை செலவு செய்ய முடியும். இதனால் பட்ஜெட் திட்டங்களை விரைவாக செயல்பட தொடங்கின.
சரி விஷயத்திற்கு வருவோம், இந்த ஆண்டு பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா செய்யப்படாதா..?
பட்ஜெட்டுக்காகவும், இதர முக்கிய பணிகளுக்காகவும் நாடாளுமன்ற ஞாயிற்றுக்கிழமை அமர்வு நடத்துவது புதிதல்ல. பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதல் பல முறை ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் நடத்துள்ளது.
உதாரணமாக கோவிட் 19 தொற்று காலத்தில் 2020இல் ஞாயிறு நாடாளுமன்ற அமர்வுகள் நடந்தன. 2012 மே 13இல் நாடாளுமன்றத்தின் 60ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட ஞாயிறு அமர்வு நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்றார்.
2026 யூனியன் பட்ஜெட் பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை எவ்விதமான மாற்று ஏற்பாடு இல்லாமல் தாக்கல் செய்யப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications