வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து விட்டதால் இந்திய ரயில்வே அதைப் பல வடிவங்களிலும் அறிமுகப்படுத்தி வருகிறது.
ஒரு பகல் நேர எக்ஸ்பிரஸ் ஒரு ஊரில் இருந்து காலையில் கிளம்பி இரவுக்குள் மீண்டும் அதே ஊருக்குத் திரும்பி வரவேண்டும். இதுதான் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் கான்செப்ட். அதன்படி 700 கி.மீ. வரையிலுள்ள நகரங்களுக்கிடையே சதாப்தி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் நீண்ட தொலைவு நகரங்களுக்கு இடையே ராஜதானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சதாப்தி, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டுமே அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களாகும். சதாப்தி பகல் நேர ௐஎக்ஸ்பிரஸ், ராஜதானி இரவு பகல் எக்ஸ்பிரஸ்.
இந்த நிலையில் திடீரென்று அதிநவீன வசதிகள் அமைந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை சதாப்தி வழித்தடத்தில் அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே துறை. இந்த ரயில்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியதைத் தொடர்ந்து நிறைய தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை இந்திய ரயில்வே இயக்கத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் 200 கி.மீ. தொலைவுக்கிடையேயான நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை இணைக்க முடிவு செய்து ஜூலை முதல் அந்த சேவை தொடங்குகிறது. இது லோக்கல் ரயில்களுக்குப் போட்டியாகும்.
இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதற்கான பெட்டிகள் உருவாக்கப்பட்டு விரைவில் அறிமுகமாக உள்ளன.
இந்த ஸ்லீப்பர் ரயில்கள் ராஜதானி வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
இந்த நிலையில் சதாப்தி மற்றும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே இயக்க உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் முதல் செமி ஹைஸ்பீடு ரயிலான வந்தே பாரத் சென்னையிலுள்ள இன்டகிரல் கோச் பேக்டரியில் தயாரிக்கப்படுகிறது.
அதி நவீன வசதிகளுடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. இதனிடையே சதாப்தி ரயில்களையும் ராஜதானி ரயில்களையும் வந்தே பாரத் ரயில்கள் படிப்படியாக மாற்றி விடும் என்று ரயில்வே வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்து ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா கூறுகையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல வழித்தடங்கள் சதாப்தி ரயிலுக்கானது. இதனால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் வரலாம்.
வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகளை உடனடியாக அதிகளவில் உற்பத்தி செய்ய முடியாது என்பதால் அதுவரை அந்த வழித்தடங்களில் சதாப்தி ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications