பான் கார்டு பல்வேறு நிதி நடவடிக்கைகளுக்கு முக்கியமான ஆவணமாக உள்ளது. அதாவது வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் KYC சரிபார்ப்பு செயல்முறை வரை அனைத்திற்கும் தேவையான ஆவணங்களில் பான் கார்டும் ஒன்று. எங்கே சென்றாலும் தற்போது பான் கார்டு அல்லது ஆதார் கார்டைத் தான் முதலில் கேட்கின்றனர். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு காலாவதி ஆகிவிடுமா? அல்லது அதற்கு தொடர்ந்து அப்டேட் தேவையா? என்பது குறித்து யோசித்ததுண்டா? அப்படியானால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு.
உங்களுக்கான பதில் பான் கார்டு ஒருபோதும் காலாவதி ஆகாது. ஒரு முறை பான் கார்டு பெற்று விட்டால், அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். அதை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேலை அட்டைதாரர் மரணித்தால் அதன் பிறகு பான் கார்டை ரத்து செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ரத்து செய்யும் நடவடிக்கையும் கட்டாயம் கிடையாது. தேவைப்பட்டால் நீங்கள் பான் கார்டை ரத்து செய்து கொள்ளலாம். அப்படி செய்யவில்லை என்றால் இறந்தவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவரின் இறப்புக்குப் பிறகு, அவை மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்படலாம்.
பான் கார்டும் காலாவதி ஆகிவிடும் என்ற சில வதந்திகள் சமூக ஊடக தளங்களில் பரவுகின்றன. பெரும்பாலும் மக்களை ஏமாற்றும் நோக்கில் மோசடி செய்பவர்களால் இது போன்ற செய்திகள் பகிரப்படுகிறது. உங்கள் பான் கார்டை புதுப்பிக்க சொல்லி, உங்களுடைய விவரங்களைப் பெற்று ஏமாற்ற முயற்சிக்கலாம். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பான் கார்டு 10 இலக்க எண்ணைக் கொண்டுள்ளது. ஆங்கில வார்த்தைகளில் இந்த நம்பர் தொடங்கும். இதில் கார்டுதாரரின் கையெழுத்து, புகைப்படம் மற்றும் முகவரி ஆகிய விவரங்கள் இருக்கும். பான் கார்டு நம்பர் ஒருபோதும் மாறாது. ஒரு முறை நீங்கள் பான் கார்டு பெற்று விட்டால், அதில் உள்ள பிற தகவல்களை மட்டுமே நீங்கள் புதுப்பிக்க முடியும்.
வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 139A-இன் கீழ், ஒரு நபர் ஒரு பான் கார்டை மட்டுமே வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பெயரில் ஏற்கனவே பான் கார்டு வழங்கப்பட்டிருந்தால், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு செய்வது பிரிவு 139A-ஐ மீறுவதாகும் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பான் கார்டு காலாவதியாகாது என்றாலும், உங்களுடைய ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்காமல் அரசாங்க விதிகளுக்கு இணங்கத் தவறினால் பான் கார்டு செல்லுபடி ஆகாமல் போகலாம்.
உங்கள் பான் கார்டு செல்லுபடியாவதை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 1: முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "Verify your PAN" என்பதைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் பான் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட தேவையான விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: நீங்கள் தகவலை வழங்கியதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும். OTP-ஐப் பெற உங்கள் மொபைல் நம்பர் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தவும்.
ஸ்டெப் 5: பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்து, "Validate" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: இப்போது உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா என்ற விவரங்கள் காண்பிக்கப்படும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications