டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் 2021ல் டெஸ்லா கார்களை வாங்க பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவித்து அடுத்தச் சில மாதத்தில் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற்றார். இதற்குச் சூற்றுசூழல்-ஐ பாதிக்கும் வகையில் நிலக்கரி, டீசல் ஜெனரேட்டார் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
பிட்காயின் உற்பத்தியில் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்கும் மின்சாரத்தின் பயன்பாடு 50 சதவீதத்திற்கு குறையும் போது மீண்டும் பிட்காயின் பேமெண்ட் சேவையாக அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார்.
டெஸ்லா தளம்
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் டெஸ்லா இணையத் தளத்தில் இருக்கும் டிசர்ட், ஜாகெட், போன்ற என அனைத்து மெர்சென்டைஸ் பொருட்களையும் டோஜ்காயின் மூலம் வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.
டோஜ்காயின்
தற்போது இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் டோஜ்காயின் மூலம் பொருட்களை வாங்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளதாக எலான் மஸ்க் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
டோஜ்காயின் விலை
இதன் எதிரொலியாக டோஜ்காயின் விலை ஒரு நாளில் சுமார் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டோஜ்காயின் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று 3.51 சதவீதம் சரிந்து 0.189 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
பிட்காயின் மதிப்பு
இன்றைய வர்த்தகச் சரிவின் மூலம் டோஜ்காயின் மதிப்பு 25,113,550,123 டாலராக உள்ளது, மேலும் கடந்த 7 நாட்களில் பிட்காயின் விலை சுமார் 22 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் பிட்காயின் மதிப்பு 0.78 சதவீதம் உயர்ந்து 43,040.15 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படும். கடந்த 7 நாட்களில் பிட்காயின் மதிப்பு 2.18 சதவீதம் உயர்ந்துள்ளது.
எதிரியம், பினான்ஸ் காயின்
எதிரியம் மதிப்பு 1.92 சதவீதம் உயர்ந்து 3,326.26 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படும். கடந்த 7 நாட்களில் எதிரியம் மதிப்பு 2.83 சதவீதம் உயர்ந்துள்ளது. பினான்ஸ் காயின் மதிப்பு 2.60 சதவீதம் உயர்ந்து 492.92 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படும். கடந்த 7 நாட்களில் பினான்ஸ் காயின் மதிப்பு 7.76 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications