அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல மாற்றங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதில் முக்கியமாக டிரம்ப் உத்தரவின் பெயரில் அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட DOGE அமைப்பு தற்போது 350 பில்லியன் டாலர் சொத்து மதிப்புக்கு அதிபதியான எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமையில் இயங்கி வருகிறது.
இந்த DOGE அமைப்பு சீனாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சீனாவின் கொள்கை ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக 2வது முறையாக ஆட்சிக்கு வரவுள்ள டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு இந்த DOGE அமைப்பின் மூலம் மேம்பட்ட அரசு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமரிக்காவின் அரசு நிர்வாக கூடுதலாக சீர்திருத்தம் செய்யப்பட்டால், சீனா போன்ற நாடுகள் அமெரிக்க அரசு அமைப்பில் தற்போது இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் போகும். இதனால் சூப்பர் பவராக மாற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் தடையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் கல்வியாளரும் பெய்ஜிங்கின் கொள்கை ஆலோசகருமான ஜெங் யோங்னியன் கூறுகையில், எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமையிலான அமெரிக்காவின் DOGE அமைப்பு, திறமையான நிர்வாகம் மற்றும் புதிய கொள்கைகளின் மூலம் சீனாவின் தற்போதைய அரசியல் அமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரின் தலைமையில் இயங்கும் DOGE அமைப்பு ஏற்கனவே "ஆயிரக்கணக்கான விதிமுறைகளை" அகற்றி, அரசாங்க பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் நிர்வாகத்தை மிகவும் திறமையாக மாற்றி, சீனாவுடன் போட்டியிடத் தயாராகும்.
டிரம்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கனவே அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த உடனேயே 60 சதவீதம் வரையில் வரி விதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு சீனா மீதான வர்த்தகத் தடைகள் அதிகரிக்கப்படலாம் மற்றும் தைவான், தென் சீனக் கடல் பிரச்சினைகளில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாடு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications