புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..!

கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் பிட்காயின் புகழை முழுமையாகத் தட்டிச்சென்றுள்ள டோஜ்காயின் இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் எலான் மஸ்க் SNL நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டோஜ்காயின்-ஐ மிகப்பெரிய அளவில் ஆதரித்துப் பேசியதும், அதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து நம்பிக்கையும், புதிய முதலீடுகளும் தான் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.

பிட்காயினுக்குப் போட்டி

பிட்காயினுக்குப் போட்டி

பிட்காயினுக்குப் போட்டியாகவும், விளையாட்டாகவும் மீம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கிரிப்டோகரன்சி தான் டோஜ்காயின், ஆனால் இன்று பிட்காயினுக்கு ஒரு மாற்று முதலீடாகவும், மக்களின் நாணயமாகவும் விளங்குகிறது.

டோஜ்காயினுக்குப் பெருகும் ஆதரவு

டோஜ்காயினுக்குப் பெருகும் ஆதரவு

இவை அனைத்தையும் தாண்டி உலகின் பல டெக் தலைவர்களும், பெரும் நிறுவனங்களின் தலைவர்களும் டோஜ்காயினுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் குவிந்து வருகின்றனர்.

பிட்காயின் வாய்ப்பு

பிட்காயின் வாய்ப்பு

பிட்காயின் முதலீட்டுச் சந்தையில் பெரும் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்களும், பென்ஷன் பண்ட் நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இதன் மதிப்பும் நிலைப்பெற்று கணிசமான வளர்ச்சி அடைந்து வருகிறது.

முதலீட்டு வாய்ப்பு அதிகம்

முதலீட்டு வாய்ப்பு அதிகம்

மேலும் டோஜ்காயின் இன்றைய 0.74 டாலர் உச்சத்தின் மூலம் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 14,748.83 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. உதாரணமாக ஜனவரி 1ஆம் தேதி டோஜ்காயின்-ல் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 1.47 கோடி ரூபாய்.

டோஜ்காயின் 0.74 டாலர்

டோஜ்காயின் 0.74 டாலர்

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் டோஜ்காயின் 0.59 டாலரில் இருந்து 0.74 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதோடு இன்றைய வர்த்தகம் உச்சமான 0.7407 டாலர் விலை தான் டோஜ்காயினின் வரலாற்று உச்சமாக உள்ளது.

92 பில்லியன் டாலர்

92 பில்லியன் டாலர்

இன்றைய வர்த்தக உச்சத்தின் வாயிலாக டோஜ்காயினின் மொத்த சந்தை மதிப்பு 92 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. 92 பில்லியன் டாலர் மதிப்பீடு என்பது உலகின் பல முன்னணி நிறுவனங்களின் மதிப்பை விடவும் அதிகமாகும்.

2021 வளர்ச்சி அளவீடு

2021 வளர்ச்சி அளவீடு

மேலும் டோஜ்காயின் இன்றைய 0.74 டாலர் உச்சத்தின் மூலம் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 14,748.83 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. உதாரணமாக ஜனவரி 1ஆம் தேதி டோஜ்காயின்-ல் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 1.47 கோடி ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+