ஓரே மாதத்தில் 760% வளர்ச்சி.. 1லட்ச முதலீட்டுக்கு 7.6 லட்சம் வருமானம்.. வியந்து பார்க்கும் முதலீட்டாளர்கள்..!

ஓரே மாதத்தில் 760% வளர்ச்சி.. 1லட்ச முதலீட்டுக்கு 7.6 லட்சம் வருமானம்.. வியந்து பார்க்கும் முதலீட்டாளர்கள்..!

கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் பிட்காயின் பிரபலத்தை மொத்தமாக வாரிக்கொண்ட ஒரு கிரிப்டோகரன்சியாக விளங்குகிறது டோஜ்காயின்.

எலான் மஸ்க் உட்படப் பல முன்னணி முதலீட்டாளர்களின் தொடர்ந்து ஆதரவு மற்றும் ரீடைல் முதலீட்டாளர்களின் ஆதரவும் டோஜ்காயின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

டோஜ்காயின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் பெரு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் சிறு முதலீட்டாளர்கள் அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் முதலீடு செய்வோர் கூட வாங்கும் ஒரு கிரிப்டோகரன்சியாக விளங்குகிறது.

 டோஜ்காயின் தன்மை

டோஜ்காயின் தன்மை

விலை குறைவாகவும், அதேநேரத்தில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இதன் மதிப்பு தொடர்ந்து பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் டோஜ்காயின் மதிப்பு 0.689 டாலர் அளவை எட்டி வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

 57 சதவீத வளர்ச்சி

57 சதவீத வளர்ச்சி

டோஜ்காயின் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 0.43 டாலர் மதிப்பில் இருந்து 0.689 டாலர் வரையில் வளர்ச்சி அடைந்து சுமார் 57 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 0.689 அமெரிக்க டாலர் என்பது ஒரு டாலருக்குக் குறைவானதாக இருந்தாலும் அதன் வளர்ச்சி வியந்து பார்க்கும் ஒன்றாக உள்ளது.

 வேடிக்கை நாணயம்

வேடிக்கை நாணயம்

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜனவரி 1ஆம் தேதி ஒரு டோஜ்காயின் மதிப்பு என்பது 0.0046 டாலர் மட்டுமே, பிட்காயின் வளர்ச்சியைக் கண்டு வியக்க துவங்கிய மக்கள் டோஜ்காயின்-ஐ முதலில் ஒரு வேடிக்கையான ஒரு நாணயமாகத் தான் பார்த்தார்கள்.

 சமுகவலைதளத்தின் சக்தி

சமுகவலைதளத்தின் சக்தி

ஆனால் சமுகவலைதளத்தில் டோஜ்காயினுக்கு இருக்கும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தது, இதில் வியந்துபோன டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்-ன் முதலீடும் ஆதரவும் புதிதாகப் பல கோடி முதலீட்டாளர்களை டோஜ்காயினில் முதலீடு செய்ய வைத்தது.

 பிரம்மாண்ட வளர்ச்சி

பிரம்மாண்ட வளர்ச்சி

இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதி 0.0046 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட டோஜ்காயின் இன்று 0.689 டாலருக்கு உயர்ந்து வெறும் 4 மாதம் 5 நாட்களில் 13,938.38 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கிட்டதட்ட 140 மடங்கு அதாவது நீங்கள் ஜனவரி மாதம் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 1.4 கோடி ரூபாய்.

 வரலாற்று உச்ச அளவு

வரலாற்று உச்ச அளவு

இன்று டோஜ்காயின் தனது வரலாற்று உச்ச அளவான 0.689 டாலரை அடைந்துள்ளது மூலம் இதன் மொத்த சந்தை மதிப்பு 88.80 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. விரைவில் டோஜ்காயின் 1 டாலர் அளவீட்டையும், 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டு அளவையும் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 திடீர் வளர்ச்சி

திடீர் வளர்ச்சி


இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் eToro மற்றும் ஜெமினி ஆகிய இருக்கு முக்கிய வர்த்தகத் தளம் டோஜ்காயின் தனது முக்கிய வர்த்தகப் பொருளாக இணைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் Oakland Athletics-ன் பேஸ்பால் அணியும் டோஜ்காயினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன் வாயிலாகவே இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது டோஜ்காயின்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+