கிரிப்டோகரன்சி மீதான முதலீடும், முதலீடு செய்வோர் எண்ணிக்கையும் தற்போது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பிட்காயினுக்கு அடுத்தபடியாக அனைவருக்கும் பிடித்த மற்றும் விருப்பமான முதலீடாக இருப்பது டோஜ்காயின் தான்.
எலான் மஸ்க் தனது சொந்த முதலீட்டு வாயிலாக டோஜ்காயினில் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் படி சர்வதேச அளவில் புழக்கத்தில் இருக்கும் மொத்த டோஜ்காயின் எண்ணிக்கையில் கிட்டதட்ட 3ல் ஒரு பங்கு எலான் மஸ்க் வைத்துள்ளதாகக் கூறப்பட்டது, இது உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் மஸ்க்-ன் ஒரு டிவீட் மொத்தத்தையும் மாற்றியுள்ளது.
எலான் மஸ்க் - The DogeFather
எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் The DogeFather மே 8 சனிக்கிழமை இரவு லைவ்-ல் (SNL Show) வருவதாக டிவீட் செய்திருந்தார். எலான் மஸ்க் தன்னைத் தானே The DogeFather என்ற கூறியது கடந்த வாரம் வெளியான செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது.
30 சதவீதம் வளர்ச்சி
இதன் எதிரொலியாக நேற்று இரவு டோஜ்காயின் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 30 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இரவு வர்த்தகத்தில் டோஜ்காயின் 0.29 டாலரில் இருந்து 0.34 டாலராக உயர்ந்துள்ளது.
மாஸ் காட்டும் டோஜ்காயின்
இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் டோஜ்காயினின் மொத்த சந்தை மதிப்பு 40 பில்லியன் டாலரை கடந்துள்ளது. இதுவரை சந்தையில் சுமார் 129.25 பில்லியன் டோஜ்காயின் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் மட்டும் டோஜ்காயின் மதிப்பு சுமார் 6,495.27 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு
எலான் மஸ் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு அளித்து வருவதைப் பல விமர்சனம் செய்தாலும், இந்தியாவில் குறிப்பாகத் தென் இந்தியாவில் ஒரு பெண் கிரிப்டோ முதலீட்டாளரின் டிவீட் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
27 இந்திய ரூபாய் முதலீடு
அந்த டிவீட்டில் டோஜ்காயினுக்கு உங்கள் வார்த்தைகள் தான் உயர் எனத் தெரிவித்துள்ள ரம்யா, 27 இந்திய ரூபாய்க்கு வாங்கி 184 டோஜ்காயின் இன்று 5000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 5000 ரூபாய் என்பது பெரு முதலீட்டாளர்களுக்குச் சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால் இது என்னுடைய கடின உழைப்பில் உருவானது என உருக்கமாக டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications