இன்று மிக பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று எலான் மஸ்க் - ட்விட்டரின் டீல் தான். சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் 100 சதவீத பங்கினை 44 பில்லியன் டாலருக்கு, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கவுள்ளார்.
இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவெனில் ட்விட்டரின் ஒரு பங்கு விலையை 54.20 டாலருக்கு வாங்கவுள்ளது தான். இது அதன் சந்தை விலையுடன் ஒப்பிடும்போது 38% அதிகமாகும்.
எலான் மஸ்க்கின் இந்த டீலின் மத்தியில் டோஜ்காயின் மதிப்பானது 29% அதிகரித்து காணப்படுகின்றது.
தற்போதைய நிலவரம் என்ன?
டோஜ்காயின் மதிப்பானது தற்போது 28.61% அதிகரித்து, 0.160278 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் இதுவரையில் 0.17 டாலர். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 0.12 டாலர். இதன் ஆல் டைம் உச்சம் 0.740010 டாலராகும். இந்த காயின் நடப்பு ஆண்டில் இதுவரையில் 6.24% சரிவினையே கண்டுள்ளது.
ஏன் இந்த ஏற்றம்
டோஜ்காயினின் இந்த ஏற்றமானது எலான் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கியதாக அறிவித்த பிறகு ஏற்றம் கண்டுள்ளது. முன்னதாக இந்த சமூக வலைதள நிறுவனத்தில் 9% பங்கினை வாங்கியிருந்த நிலையில்,நிர்வாக குழுவுக்கு அழைக்கப்பட்ட எலான் மஸ்க் அதனை மறுத்திருந்த நிலையில், தற்போது 100% பங்கினையும் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது தனி ஒரு நபராக வழி நடத்த இருக்கிறார்.
இது முதல் முறையல்ல
எலான் மஸ்க் தொடர்பான செய்திகள் வெளியாகும்போதெல்லாம், இந்த பிரபல கிரிப்டோகரன்சியானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. மஸ்க்கின் கருத்துகளுக்கு பல முறை இது போன்று ஏற்றம் கண்டுள்ளது. சமீபத்தில் எலான் மஸ்க்கின் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை மேம்படுத்த பல வழிகளை பரிந்துரை செய்திருந்தார். அப்போது டோஜ்காயின் ஒரு சாத்தியமான கட்டணமாக விருப்பமாக இருக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.
எதிர்பார்ப்பு
இந்த நிலையில் தற்போது ட்விட்டரையே விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதோடு ட்விட்டரில் வர இருக்கும் மாற்றங்கள் குறித்து நெட்டிசன்கள் ஆர்வத்தோடு பதிவிட்டு வருகிறார்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications