பொதுவாக வார விடுமுறைகளில் குடும்பத்தினருடன் வெளியே சென்று உணவு உண்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கலாம். இது வேகமாக பரவி வரும் ஒரு கலாச்சாரமாகவும் இருந்து வருகின்றது. அதேபோல தங்களுடன் தங்களது செல்லப் பிராணிகளையும் கொண்டு செல்லும் போக்கும் உள்ளது.
எனினும் சில இடங்களில் சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கான உணவு என்பது சரியாக கிடைக்காது.
ஆனால் இப்படியான ஒரு விஷயத்தை மையப்படுத்தி, மத்திய பிரதேசம் இந்தூரில், டாக்கி தாபா எனும் ஹோட்டல் ஒன்று உள்ளது.
நாய்களுக்கான உணவகம்
நாய் உரிமையாளர்கள் தங்களது செல்ல நாய்களை உணவகத்திற்கு அழைத்து வர நினைத்தாலும், சாதாராண ஹோட்டல்களில் அதற்கு அனுமதி கிடைக்காது. அது சரியும் வராது. ஆக அப்படியானவர்களுக்கு இது நிச்சயம் ஒரு சூப்பர் ஐடியா என்றே கூறலாம்.
நாய்க்களுக்கான பிரத்யேக ஹோட்டலான இங்கு, உங்களது செல்லபிராணியை அழைத்து வந்து, அவற்றிற்கு பிடித்தமான, சைவ அசைவ உணவுகளை வாங்கிக் கொடுக்கலாம்.
எவ்வளவு கட்டணம்?
இங்கு சுவையான விதவிதமான உணவுகளை வாங்கிக் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 7 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான கட்டணம் விதிக்கப்படுகின்றது. இதில் உங்கள் நாய்களுக்கு பிடித்தமான உணவினை தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கலாம். அதேபோல நாய்களின் பிறந்த நாள் உள்பட பல விஷேச நாட்களையும் இங்கு கொண்டாடும் வகையில, இங்கு ஆர்டர் செய்து கொள்ளும் வசதிகள் செய்யப்படுகிறதாம்.
நாய்கள் மீது பாசம்
இந்தூரை தலைமையிடமாகக் கொண்ட டாக்கி தாபாவை பால்ராஜ் ஜலா மற்றும் அவரது மனைவியும் இணைந்து கொரோனா லாக்டவுன் காலத்தில் தொடங்கினர். பால்ராஜ் 2019 வரையில் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது பணி முடிந்து திரும்பி வரும் வழியில் நாய்களுக்கு உணவு அளிப்பாராம். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே நாய்கள் மீது அளவுக்கு அதிகமான பிரியம் உண்டாம்.
நாய்களுக்கான உணவு தேவை
லாக்டவுன் காலகட்டத்தில் நாய்கள் தங்கள் உணவை கண்டுபிடிக்க பெரும் சிரமப்பட்டு வந்ததை கண் கூடாக பார்த்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மனிதர்களே உணவு கிடைக்காமல் அல்லல்பட்டபோது, செல்லப்பிராணிகளுக்கு எப்படி தரமான உணவு கிடைக்கும் என்பதை உணர்ந்த பால்ராஜ், தரமான நாய் உணவுகளுக்கான தேவை என்பது உள்ளது என்பதை உணர்ந்தார். இந்த நிலையில் தான் 2020ல் டாக்கி தாபா என்ற உணவகத்தினையும் தொடங்கியுள்ளார்.
பிரபலமடைந்து வருகிறது?
டாக்கி தாபாவில் அடிப்படை உணவு, சைவம், அசைவம் என தனித் தனியாக உணவு வாங்கிக் கொள்ளலாம். பிறந்த நாட்களுக்கு ஏற்ப கேக் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுமட்டும் அல்ல நாய்களுக்கான போர்டிங் வசதிகள், அவற்றிற்கு தேவையான உடற்பயிற்சிகள், விளையாட்டு மற்றும் சமூகமயமாக்கல் போன்ற சேவைகளை வழங்குகின்றன. மொத்தத்தில் இந்தூரில் நாய் தாபா என்பது தற்போது பெரும் பிரபலமடைந்து வருகின்றது.
பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுக்கலாம்
மொத்தத்தில் இனி விலங்குகளும் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி வாங்கிக் கொடுக்க முடியும். இது அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதொரு வாய்ப்பாக இருக்காது என்றாலும், மேல் தட்டு மக்கள் மத்தியில் இது வரவேற்பை பெறலாம்.


Click it and Unblock the Notifications