ஒரு குரங்கு குல்லா 40000 ரூபாய்.. ஒரு ஸ்டிக்கர் மட்டும் தான் எக்ஸ்ட்ரா..!

இத்தாலி நாட்டின் ஆடம்பர பேஷன் பிராண்டான டோல்சே & கபனா காக்கி ஸ்கி மாஸ்க் தொப்பி அதாவது நம்ம ஊரில் மங்கி கேப் எனக் கூறப்படும் தொப்பியை அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

சமீபத்தில் ஆடம்பர பிராண்டுகள் புதிதாக வடிவமைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்க தடுமாறி வரும் வேளையில், ஈசியாக விளம்பரம் தேடவும், ஆடம்பர சந்தையில் தொடர்ந்து தனது பிராண்டின் பெயர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இதுப்போன்று மக்கள் கையில் பொதுவாகக் கிடைக்கும் ஒரு பொருளை மாறுபட்ட மெட்டிரியலில் தயாரித்து அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

இதைப் பணக்காரர்கள் இண்டர்நெட் டிரெண்டாகவும், தன்னிடம் பணம் இருப்பதைக் காட்டிக்கொள்ளும் சிலர் முந்தி அடித்துக்கொண்டு இதுப்போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் நெட்டிசன்கள் டோல்சே & கபனா பிராண்டின் காக்கி ஸ்கி மாஸ்க் தொப்பியை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

குரங்கு குல்லா

குரங்கு குல்லா

குளிர்காலத்தில் நம்முடைய பெற்றோர்கள் இந்தக் குரங்கு குல்லா -வை அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் தருணம் அனைவருக்கும் நடந்திருக்கும். குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டின் அலமாரியில் இருக்கும் குரங்கு குல்லா, ஸ்வெட்டர் ஆகியவை வெளியில் வந்துவிடும்.

100 ரூபாய்

100 ரூபாய்

இந்தக் குரங்கு குல்லா பொதுவாகவே தலை, காது, கழுத்து மற்றும் வாய் என அனைத்தையும் மூடிக்கொண்டு குளிர்ந்த காற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இவை இந்தியா முழுவதும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாகவும் 50 - 100 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யக் கூடியதாகவும் உள்ளது.

டோல்சே & கபனா - 40,000 ரூபாய் விலை

டோல்சே & கபனா - 40,000 ரூபாய் விலை

இந்தக் குரங்கு குல்லா தற்போதைய டிரெண்டில் இல்லை என்று சிலர் நினைத்தாலும், இத்தாலி நாட்டின் ஆடம்பர பேஷன் நிறுவனமான டோல்சே & கபனா சுமார் 40,000 ரூபாய் விலையில் காக்கி நிற மங்கி கேப்பைக் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

பனிச்சறுக்கு விளையாட்டு

பனிச்சறுக்கு விளையாட்டு

நமக்கு இது மங்கி கேப் ஆக இருந்தாலும், டோல்சே & கபனா பிராண்ட் இதைப் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான Ski விளையாட்டில் பயன்படுத்த கூடிய ஒரு லைப்ஸ்டைல் பொருட்களாகப் பார்க்கிறது. டோல்சே & கபனா இதை ஸ்கி மாஸ் கேப் ஆக விற்பனை செய்கிறது.

ஸ்கி மாஸ் கேப்

ஸ்கி மாஸ் கேப்

இந்த நிலையில் ஸ்வாதி என்பவர் தனது ட்வீட்டில், இந்த ஸ்கி மாஸ் கேப்-ன் ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்துள்ளார். இதன் அசல் விலை 40,000 ரூபாய் ஆனால் தள்ளுபடி விலையான 31,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Balenciaga பிராண்டு

Balenciaga பிராண்டு

சமீபத்தில் ஆடம்பர பேஷன் பிராண்டான Balenciaga 2022 ஆகஸ்ட் மாதம் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான கார்பேஜ் பேக் வடிவிலான ஒரு பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது. Balenciaga நிறுவனம் இந்தப் பேக்-க்கு Trash Pouch எனப் பெயரிட்டு பேஷன் ஷோவில் அறிமுகம் செய்தது.

Trash Pouch விலை

Trash Pouch விலை

தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த Balenciaga பிராண்டின் Trash Pouch விலை 1790 அமெரிக்க டாலர், இது இந்திய ரூபாய் மதிப்பில் 1.4 லட்சம் கோடி ரூபாய். இந்தப் பேக் அச்சுஅசல் கார்பேஜ் பேக் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது Balenciaga நிறுவனம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+