வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டில் 125 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என கூறுகிறது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் சீனாவுக்கு 50 பில்லியன் டாலர்களையும், பிலிப்பைன்ஸுக்கு 39 பில்லியன் டாலர்களையும், பாகிஸ்தானுக்கு 27 பில்லியன் டாலர்களையும் அந்தந்த நாட்டினர் அனுப்பி வைத்துள்ளனர்.
2023ஆம் நிதி ஆண்டில் மட்டும் மொத்தமாக 656 பில்லியன் டாலர்கள் இப்படி பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட டாலர் மதிப்பு 7.5% என அதிகரித்து 2023 ஆம் ஆண்டில் 120 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது என கூறுகிறது.
அதாவது வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களில் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்களே முதலிடத்தில் இருக்கின்றனர். உலக வங்கியின் கூற்றுப்படி டாலருக்கு அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் திராம் தான் அதிகளவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 18% என தெரிவிக்கிறது.
பெரும்பாலான இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகங்களில் வேலைக்கு செல்வதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். டாலருக்கு அடுத்த மிகப்பெரிய பண பரிமாற்ற கரன்சியாக திராம் இருக்கிறது. இதற்கு இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான 2023 ஒப்பந்தமும் ஒரு காரணம். எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்த ஒப்பந்தம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.
அதாவது திராம்களை டாலரை கொண்டு மாற்றுவதற்கு பதிலாக நேரடியாகவே திராம் மற்றும் ரூபாய் என பரிமாற்றம் செய்வது . இதனால் சவுதி அரேபியா, குவைத், ஓமன் கத்தார் ஆகியவை இந்தியாவின் மொத்த பணப்பரிமாற்றத்தில் 13 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த பகுதிகளில் எல்லாம் இந்தியாவின் யுபிஐ சேவைகளை பயன்படுத்தவும் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பணப் பரிமாற்றத்துக்கான செலவுகள் குறைகின்றன.
இதனிடையே இந்தியாவுக்கு 2024ஆம் ஆண்டில் டாலர்கள் வரத்து 3.7 சதவிகிதம் உயர்ந்து 124 பில்லியன் டாலர்கள் என்றும், 2025ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலர்கள் என்றும் உயரும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications