ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரம்புகளை நீக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு விமான போக்குவரத்துக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட்31-ம் தேதி முதல் உள்நாட்டு விமான பயண கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரம்பை நீக்க உள்ளதாக அண்மையில் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்து இருந்தது.
அது என்ன விமான டிக்கெட் கட்டணம் வரம்பு? எப்படி விமான டிக்கெட் கட்டணம் விலை குறையும் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
விமான டிக்கெட் கட்டணம் வரம்பு
எடுத்துக்காட்டுக்கு, சிறு விமான நிறுவனங்கள், பெரும் விமான நிறுவனங்கள் என யாரும் பாதிக்கப்படாத வகையில் குறைந்தது 2900 முதல் 8,800 ரூபாய்க்குள் விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயத்துக் கொள்ளாலாம் என மே 2020-ம் தேதி உத்தரவிடப்பட்டு இருந்தது.
வரம்புகள் நீக்கம்
முதலில் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் ஒரு காலியிடம் வேண்டும் என்ற முடிவைச் சென்ற ஆண்டு விமான போக்குவரத்துத் துறை நீக்கியது. ஆனால் ஆனால் இந்த கட்டணம் வரம்பு மட்டும் நீக்கப்படாமல் இருந்தது. இப்போது அது நீக்கப்பட்டுள்ளதால் விரைவில் விமான நிறுவனங்கள் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்க விமான டிக்கெட் கட்டணங்களை தங்களுக்கு ஏற்றார் போல சலுகைகளுடன் அறிவிக்க வாய்ப்புள்ளது.
அமைச்சர் கருத்து
இது குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தினசரி விமான போக்குவரத்துத் தேவை, விமான எரிபொருள் கட்டணம் போன்றவற்றை ஆய்வு செய்து விமான டிக்கெட் கட்டணம் வரம்பு நீக்கம் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடையும்." என தெரிவித்துள்ளார்.
பயணிகள் எதிர்பார்ப்பு
கொரோனாவுக்கு முன்பு 1000 ரூபாய்க்குள் எல்லாம் டிக்கெட் கட்டணங்களை விமான நிறுவனங்கள் அறிவித்து வந்தன. இப்போது மீண்டும் இது போன்ற அறிவிப்புகள் வெளிவருமா என விமான பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications