மார்ச் 1, இன்று LPG கேஸ் விலை, வங்கிக் கடன் விகிதங்கள், ரயில் போக்குவரத்து, வங்கி விடுமுறைகள், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்குமான விதிகள் மாறுகிறது.
இந்தியாவில் மக்கள் தங்கள் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எரிவாயு விலை, வங்கி விடுமுறைகள், வீட்டுக் கடன் வட்டி விகிதம், தனிநபர் கடன் வட்டி, பயணிகள் ரயில் பெட்டிகள் கூடுதல் இணைப்புகள், போன்ற அனைத்திற்குமான விதிகளில் மாற்றங்களை அரசு கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பணவீக்கம், பொருளாதார மந்தநிலையை சமாளிக்க வங்கிக் கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து உயர்த்தியது, அன்றாட நுகர்வுப் பொருட்கள் மீதான விலை வாசி உயர்வும் மக்களை திக்குமுக்காடச் செய்து வருகிறது.
அப்படி மாறுமேயானால் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம், விலை, வட்டி விகிதங்களில் ஏதேனும் கூடுதல் மாற்றங்கள் உள்ளதா என்பது குறித்து இனி விரிவாகக் காண்போம்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு:
பொதுவாக ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி சமையல் எரிவாயு மீதான விலைகளில் மாற்றம் செய்யப்படும். கடந்த மாதம் கேஸ் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
அவ்வகையில் இம்மாதம் LPG எரிவாயுவின் விலையில் இன்று 50 ரூபாயாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உயர்த்தியுள்ளது. இவ்விலை உயர்வை அடுத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1103 ஆக இருக்கும் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்வு!
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அனைத்து வங்கிகளும் அதன் MCLR விகிதங்களை உயர்த்தின.
இதனால் மக்களின் வங்கிக் கடன்களுக்கான EMI தொகை உயர உள்ளதால் மார்ச் 1 முதல் சாமானிய மக்கள் கூடுதல் சுமைக்கு உள்ளாவார்கள்.ரிசர்வ் வங்கி அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதங்களை உயர்த்தலாம், இது இன்னும் மக்களின் வாழ்க்கையை சிக்களுக்குள்ளாக்கும்.
சமூக வலைத்தளங்கள்:
இம்மாதம் முதல் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மீதான விதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதன்படி தவறான, அதேசமயம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்துப் பதிவிட்டால் அதற்கான அபராதங்களை அதன் பயனாளர் மீது விதிக்கப்படும். அதேசமயம் மத உணர்வுகளை தூண்டும் வகையில் இடும் பதிவுகளுக்கு கடுமையான விதிகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
வங்கி விடுமுறை நாட்கள்!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது வாரங்களில் பொதுவாக விடுமுறை நாட்கள்தான். அதுபோக ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும். ரிசர்வ் வங்கி அட்டவணையின்படி மார்ச் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 6 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாகும்.
ரயில் அட்டவணை
ஏப்ரல் முதல் நாட்டில் கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், இந்திய ரயில்வேத்துறை ரயில் அட்டவணையில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மக்கள் தினமும் பயணிக்கும் பயணிகள் ரயில் முதல் 5,000 சரக்கு ரயில்கள் முதல் அட்டவணையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

ரெப்போ வட்டியை விடுங்க!! RBI வெளியிட்ட இந்த அறிவிப்ப கவனிச்சீங்களா? கடன் வாங்குனவங்களுக்கு நிம்மதி!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications