இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலி நிறுவனமான Domino's இதுவரையில் 30 நிமிடத்தில் பீட்சா டெலிவரி செய்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது 20 நிமிட டெலிவரி திட்டத்தை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் முதல்கட்டமாக 14 நகரங்களில் சுமார் 20 Zone-களில் செயல்படுத்த உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் QSR எனப்படும் குவிக் சர்வீஸ் ரெஸ்டாரெண்ட் சேவையைப் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு ஏற்றார் போல் QSR பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் சேவை தரத்தையும் மேம்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் இந்தியாவில் பீட்சா விற்பனையில் அசத்தி வரும் Domino's 20 நிமிட டெலிவரியை அறிமுகம் செய்துள்ளது.
Domino's நிறுவனம்
Domino's இந்த 20 நிமிட டெலிவரி சேவையை 14 நகரங்களில் சுமார் 20 Zone-களில் செயல்படும் ஸ்டோர் -களில் செயல்முறை மேம்பாடுகள், டைனமிக் ரிசோர்ஸ் பிளானிங், தொழில்நுட்ப மேம்படுத்தல் மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கான தலையீடுகள் மற்றும் அருகிலுள்ள கடைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் சாதிக்க உள்ளது.
குவிக் டெலிவரி சேவை
இந்தியாவின் முன்னணி குவிக் டெலிவரி சேவை நிறுவனங்கள் 10 நிமிடம், 15 நிமிடம் டெலிவரி சேவையை அறிமுகம் செய்த போது மக்களும், அரசு அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. தற்போது டாமினோஸ் 20 நிமிட டெலிவரியை அறிமுகம் செய்துள்ளது.
20 நிமிட டெலிவரி
உணவு தரம் மற்றும் அதன் டெலிவரி ரைடர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் 20 நிமிடங்களில் சூடான, பிரஷ்ஷான மற்றும் சுவையான பீட்சா -வை டெலிவரி செய்வதை உறுதிசெய்யச் செயல்முறையில் ஒட்டுமொத்தமாக மாற்றத்தைக் கொண்டுவர உள்ளதாகவும், இதன் மூலம் பிராண்ட் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் வர்த்தகம் மேம்படும்.
30 நிமிட டெலிவரியில் கிங்
Domino's பிராண்ட் ஏற்கனவே 30 நிமிட டெலிவரிக்கு பெயர்போன பிராண்டாக உள்ளது. இதன் மூலம் QSR துறையில் சந்தைத் தலைவராக Domino's தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
QSR துறை
Domino's-ன் டெலிவரி திறமையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல 20 நிமிட டெலிவரி அறிவிப்பு QSR துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications